களர் நிலத்தில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள்…
1.. களர் நிலத்தை சரிவுக்கேற்ப சமன் செய்து சிறுசிறு பகுதிகளாக பிரித்து வடிகால்களை அமைக்க வேண்டும்.
2.. நான்கு அங்குல உயரம் நீர் தேங்கும் அளவிற்கு வரம்புகள் அமைக்க வேண்டும்.• பாத்திகளின் உட்புறம் ஆழமாக சேற்றுழவு செய்ய வேண்டும்.
3.. மண் பரிசோதனை பரிந்துரைப்படி ஜிப்சம் இட்டு நீர் பாய்ச்சி மரக்கலப்பையால் மேலாக மண்ணை நன்கு கலக்க வேண்டும்.
4.. நீர் வடிந்த பிறகு மறுபடியும் நீர் பாய்ச்சி உழுது வடிய விட வேண்டும். இவ்வாறு மூன்று அல்லது நான்கு முறை செய்ய வேண்டும்.
5.. பசுந்தாள் உரம், கம்போஸ்ட் முதலிய அங்ககப் பொருட்களை மண்ணில் இட்டு நன்கு உழவு செய்ய வேண்டும்.
6.. நெல்,ராகி, பருத்தி, தீவனப்புல் மற்றும் மரவகைகளை பயிர் செய்யலாம்.
7.. கால் பங்கு கூடுதலான உரப்பரிந்துரையை பின்பற்ற வேண்டும்.