Wilt protect them from the coconut tree to observe the ways
அறிகுறிகள்:
வாடல் நோய் பாதித்த மரங்களின் ஓலைகள் காய்ந்து விடும்.
மரப்பட்டை எளிதில் உறிந்து வெடிப்புகள் காணப்படும்.
மரத்தண்டின் அடிப்பகுதியில் காளான்கள் தோன்றும்.
வழிகள்:
நோய் பாதிக்கப்பட்ட மரங்களை உடனே வெட்டி அப்புறப்படுத்தி விட வேண்டும்.
வெட்டிய பகுதிக்கு நீர் பாய்ச்சுவதை நிறுத்த வேண்டும்.
செந்நீர் கசியும் பகுதியை உளியைக் கொண்டு செதுக்கி எடுத்து விட்டு “கேலிக்ஸின்” என்ற மருந்தை நீரில் குழைத்து வெட்டி எடுத்த பகுதிகளில் பூசி விட வேண்டும்.
பாதிக்கப்பட்ட மற்றும் எல்லா மரங்களிலும் தூரிலிருந்து 4 அடி தள்ளி 1 அடி ஆழம் வெட்டி, அதில் உள்ள இளம் வேரைத் தெரிவு செய்து, சரிவாக அதைச் சீவி “பாலிகியூர்” என்ற மருந்தை 1 லிட்டர் நீரில் 10 மில்லி என்ற அளவில் கரைத்து ஒரு பாலீத்தின் பையில் ஊற்றி சீவிய வேர் பாலித்தின் பைக்கு உள்ளே பையின் அடிவரை இருக்குமாறு வைத்துக் கட்டி விடவும். வேர் மருந்தை உறிஞ்சி கொள்ளும்.
இவ்வாறு செய்தால் தென்னை மரத்தைக் காப்பாற்றி விடலாம்.
