காஸ் இயந்திரத்தில் ஜுரணிப்பான் எந்த மாதிரி செயலாற்றுகிறது?
காஸ் இயந்திரத்தில் ஜுரணிப்பான்
** இது ஒரு வகைக் கிணறு. பூமிக்கடியில் தோண்டி, கல்வைத்துக் கட்டப்படுவது. கிணற்றின் ஆழம் சுமார் 12 அடி (3.5 மீட்டர்) யிலிருந்து 20 அடி (6 மீ. வரை) அதில் போடக்கூடிய (சாணம் போன்ற) பொருட்களின் அளவைப் பொருத்து விட்டம் 4 அடியிலிருந்து (1.2 மீட்டர்) 20 அடி வரை (6 மீட்டர்) வேறுபடும்.
** இந்த கிணற்றை, நடுவில் கட்டப்பட்டுள்ள ஒரு சுவர் இரண்டு அரை வட்டப்பகுதிகளாகப் பிரிக்கிறது. நடுச்சுவரின் இரண்டு பக்கங்களிலும் சாய்வாக இரண்டு குழாய்கள் கிணற்றின் அடித்தளத்தை எட்டும் அளவுக்கு வைக்கப்படுகின்றன.
** கிணற்றின் மேல் தளம் வரையிலுள்ள இந்த சிமெண்ட் குழாய்கள் அடைக்கப்படாமல் திறந்திருக்கின்றன. இந்தக் குழாயில் ஒன்று கரைசலை உள்ளே செலுத்தவும், மற்றொன்று கழிவை வெளியே கொண்டு வரவும் பயன்படுகிறது. 4:5 என்ற விகிகத்தில் சாணமும் தண்ணீரும் கலக்கப்படுகின்றன.
** உள்ளே செலுத்தும் குழாய் வழியாக இது ஊற்றப்படுகிறது. கிணறு நிரம்பி பின், இதில் செலுத்தப்படும் அளவுக்கு கழிவு வெளிக்குழாயில் வந்து விழுகிறது. வெளிக்குழாய் உள்குழாயை விடச் சற்றுத் தாழ்ந்த மட்டத்தில் இருக்கும். 30 நாட்களுக்குத் தேவையான கரைசல் இருக்கும் முறையில் தான் கிணறு அமைக்கப்பட்டிருக்கிறது.
** முதலில் அது நிரப்படுகிறது. ஆகவே, எப்போதாவது உள்வழியாக ஏதாவது ஒரு பொருளைச் செலுத்தினால் அதற்குச் சமமான கழிவு வெளியே வந்துவிடுகிறது.