பொரிப்பகத்தில் இருக்கும் முட்டைகளின் இருந்து குஞ்சுகளை எப்போ வெளியில் எடுக்கணும்?
முட்டைகளை மாற்றுதல்
நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட குஞ்சு பொரிப்பான்களில் முட்டைகள் அடைகாப்பானிலிருந்து அடை வைத்த 19ம் நாள் (கோழி முட்டைகள்) அல்லது அடை வைத்த முட்டைகளில் 1% முட்டைகளில் குஞ்சுகள் முட்டை ஓடுகளை ஓட்டையிட்ட பிறகோ குஞ்சு பொரிப்பான்களுக்கு மாற்ற வேண்டும்.
பொரித்த குஞ்சுகளை வெளியே எடுத்தல்
குஞ்சுகள் பொரித்து அவற்றின் உடல் 95% உலர்ந்த பிறகு அவற்றை குஞ்சு பொரிப்பகங்களிலிருந்து வெளியே எடுத்து விட வேண்டும். குஞ்சு பொரிப்பகங்களில் குஞ்சுகள் முற்றிலுமாக உலருவதைத் தடுக்க வேண்டும்.
கடினப்படுத்துதல்
பொரித்த குஞ்சுகளை பண்ணைகளுக்கு எடுத்துச் செல்வதற்காக அட்டைப் பெட்டிகளில் வைக்கும் போது, அவற்றின் அடி வயிற்றுப் பகுதி மென்மையாக இருப்பதாலும், அவற்றின் உடல் முற்றிலும் உலராததாலும் அவைகளால் நிற்க முடியாது.
எனவே, பெட்டிகளில் குஞ்சுகளை அடைப்பதற்கு 4 முதல் 5 மணி நேரத்திற்கு முன்பாக அவற்றைக் கடினப்படுத்த வேண்டும். இவ்வாறு கடினப்படுத்துவதால் குஞ்சுகளைத் தரம் வாரியாகப் பிரிப்பது எளிதாவதுடன், குஞ்சுகளின் பாலினத்தை எளிதாகக் கண்டறியலாம்.
குஞ்சுகளைத் தரம் வாரியாகப் பிரித்தல்
குறைந்தபட்ச தரம் இல்லாமல் எந்த ஒரு கோழிக் குஞ்சும் நுகர்வோரைச் சென்றடையக் கூடாது. கோழிக்குஞ்சுகளின் தரத்தினை மதிப்பிடும் வரைமுறைகளாவன
1. உடலமைப்பில் குறைபாடுகள் இல்லாமல் இருத்தல்
2. தொப்புள் பகுதி நன்றாக மூடி ஆறியிருக்க வேண்டும்
3. குறைந்த பட்ச எடை இருத்தல்
4. நன்றாக நிற்பது.