நீரில் முழுவதும் கரையும் திட, திரவ உரங்களை தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டியவை…
சாதாரணமாக உள்ள உரங்களை உரப்பாசனத்திற்கு பயன்படுத்த முடியாது. ஏனெனில், அவை 100 சதவிகிதம் நீரில் கரைவதில்லை. நீரில் முழுவதும் கரையும் திட, திரவ உரங்கள் இம்முறைக்கு மிகவும் ஏற்றவை. அவற்றைத் தேர்ந்தெடுக்கும் போது கீழ்க்கண்டவைகளை கவனத்தில் கொள்ளவேண்டும்.
கரைதிறன்:
நாம் தேர்வு செய்யும் உரமானது, 100 சதம் நீரில் கரையக் கூடியதாக இருக்கவேண்டும். இரண்டு அல்லது மூன்று உரங்களைக் கலக்கும் போது அதன் கரைதிறன் குறையும். நைட்ரஜனின் கரைதிறனுடன் ஒப்பிடும் போது கீழ்க்கண்டவற்றைக் கருத்தில் கொள்ளவும்.
ஏ.என், = யூரியா > அம்மோனியம் சல்பேட் > ஒற்றை அம்மோனியம் பாஸ்பேட் < டி.ஏ.பி. மூரேட் ஆப் பொட்டாசியம் > பொட்டாசியம் நைட்ரேட் > ஒற்றை பொட்டாசியம் பாஸ்பேட் > எஸ்.ஓ.பி.
இது பிளாஸ்டிக் குழரய்களில் அரிப்பு மற்றும் பாசன அமைப்பில் அடைப்பு ஏதும் ஏற்படுத்தாமல் இருக்கவேண்டும்.
பாசன நீரில் உள்ள உப்பு மற்றும் பிற இராசயனங்களுடன் இந்த உரங்கள் ஏதும் எதிர் வினை புரியாமல் இருக்கவேண்டும்.
உரங்கள் நீரில் முற்றிலும் கரையக் கூடியதாக இருக்கவேண்டும் மற்றும் ஒன்றிற்கு மேற்பட்ட உரங்களை பயன்படுத்தும் போது, அவை ஒன்றுக்கொன்று வினை புரிந்து வீழ்படிவு ஏற்படாமல் இருக்கவேண்டும்.