எந்ததெந்த மண்ணில் எந்தெந்த பயிர்களை விளைவிக்கணும்? தெரிஞ்சுக்க இதை வாசிங்க...

What kind of soil will produce any crops? Read this to read ...
What kind of soil will produce any crops? Read this to read ...


1.. செம்மண் பூமி:

செம்மண்ணில் பருத்தி,  சோளம், கம்பு, அவரை,  துவரை மாதிரியான பயிர்களும்,  பல வகையான பழமரங்களும் நன்றாக வளரும்.

2.. வண்டல் பூமி:

வண்டல் மண்ணில் பருத்தி,  சோளம்,  கரும்பு,  கம்பு,  நெல்,  மிளகாய்,  கோதுமை,  ராகி,  வாழை,  மஞ்சள்,  பழமரம் போன்ற அனைத்தும் வளரும்.

3.. கரிசல் பூமி:

கரிசல் மண்ணில் பருத்தி,  சோளம்,  கடலை,  கோதுமை,  தினை, கேழ்வரகு,  கரும்பு,  கொத்தமல்லி நன்றாக வளரும்.

4.. கந்தக பூமி:

இந்த மண் சந்தன நிறத்தில் இருக்கும். இதில் சோளம்,  கேழ்வரகு,  பருத்தி,  தினை,  கம்பு,  ஆமணக்கு,  அவரை,  பழமரம்,  கிராம்பு,  மிளகு,  ஏலம் மாதிரியான பயிர்கள் விளையும்.

5.. கருமணல் பூமி:

கருமணல் கலந்த பூமியில் கரும்பு,  சாமை,  தட்டைபயிறு,  முருங்கை போன்ற சில பயிர்கள்தான் நன்றாக வளரும்.

6.. சாம்பல் நிற பூமி:

சாம்பல் நிற மண்ணில் வெங்காயம், புகையிலை,  வாழை,  பருத்தி,  நிலக்கடலை நன்றாக வளரும்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios