மாடுகளுக்கு மடிவீக்க நோய் எதனால் தோன்றுகிறது? இந்த நோயிலிருந்து மாடுகளை எப்படி மீட்பது…

What is the cure for cattle? How to rescue cows from the disease ...
What is the cure for cattle? How to rescue cows from the disease ...


மடிவீக்க நோய்

பெரும்பாலும் நுண் கிருமி தொற்று மூலமாகவே கறவை மாடுகளில் மடி வீக்க நோய் ஏற்படுகிறது.

அறிகுறி

மாட்டின் மடியானது வீக்கமாகவும், கடினத்தன்மையுடனும், வெப்பம் அதிகரித்தும் காணப்படும்.

பாதிக்கப்பட்ட கால்நடைகளில் பாலானது திரிந்து வெள்ளையாகவோ மஞ்சள் அல்லது இரத்தம் கலந்தோ காணப்படும்.

இதோ மூலிகை மருத்துவம்

ஒரு மாட்டிற்கு தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள்

1.. சோற்றுக்கற்றாழை – 200 கிராம்

2.. மஞ்சள் பொடி – 50 கிராம்

3.. சுண்ணாம்பு – 5 கிராம்

சிகிச்சை முறை:

மடியினை நன்கு கழுவி, சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும். மேற்கண்ட பொருட்கள் மூன்றையும் நன்றாக கெட்டியாக அரைத்து பின் ஒரு கை அளவு எடுத்து நீர் விட்டு கரைத்து நீர்த்த நிலையில் கால்நடையின் மடிப்பகுதி முழுவதும் நன்றாக தடவவேண்டும்.

நாள் ஒன்றுக்கு 10 முறை என்ற அளவில் மடி வீக்கம் குறையும் வரை பூச வேண்டும். இப்படி செய்வதால் மாடுகளை மடிவீக்க நோயிலிருந்து மீட்கலாம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios