உயிராற்றல் விவசாயம் என்றால் என்ன? ஒரு விரிவான அலசல்...
உயிராற்றல் விவசாயம் அல்லது உயிர்சக்தி விவசாயம்...
உயிராற்றல் விவசாயம் என்பது தூய்மையான எண்ணங்களும் இந்த உயிர்சக்திகளை இணைத்த செயல்பாடுகளும், மூலிகைத் தயாரிப்புகள், உபயோகிக்கும் காலம், உபயோகிக்கும் முறைகள் போன்றவற்றில் சிறிது மாறுபட்டு எளிமையான, மற்றும் நிரந்தர வாழ்க்கை முறைகளுக்கு வழிகாட்டுவதாகவும் அமைந்துள்ளது.
மனிதன் இந்தப் பூவுலகில் மட்டும் உறுப்பினர் அல்ல. இந்த பிரபஞ்சத்திலும் அவன் ஒரு உறுப்பினர் என்பதை இதன் மூலம் ‘ ஸ்டெய்னர்’ உணர்த்தினார். இந்த பயோடைனமிக் எனும் வார்த்தை பயோடைனமோஸ் எனும் இரு கிரேக்க வார்த்தைகளடங்கியது.
பயோஸ் - உயிர், டைனமாஸ் - சக்தி. ஆகவே நாம் இந்த முறையை ‘ உயிர்சக்தி’ விவசாயம் எனக் கூறலாம். மண்ணில் இரசாயனங்கள் அளவு எவ்வாறு அறியப்பட்டுள்ளதோ அது போன்று மண்ணில் வாழும் உயிரினங்களின் அளவுகளும் அறியப்பட்டுள்ளன. ஆகவே மண்ணின் தன்மை அதன் இரசாயன சக்திகளை விட, அதில் வாழும் உயிரிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து அதிக அளவில் மாறுபாடுகளை அடைகிறது.
இக் கருத்தை விரித்தறிந்து செயல்படுத்துவதே ‘ உயிர்சக்தி விவசாயம் ‘ முறை எனலாம்.ஆகவே மண்ணை உயிருள்ள ஒரு ஜீவனாக மதித்து அதைப் பராமரித்து அதில் விளைவிக்கப்பட்ட ஆரோக்கியமான உணவை அனைத்து உயிரினங்களும் உண்டு வாழ ஏற்படுத்தப்பட்டவழிமுறைகள் அடங்கிய கண்டுபிடிப்புகளே ’ உயிர்சக்தி விவசாயமுறை’ எனப்படுகிறது.
இதில் முக்கிய பங்கு வகிப்பவை நுண்ணுயிர்த் தயாரிப்புகள் (BD Props ) இவை மண் தாவரங்கள், மிருகங்கள் மற்றும் மனிதர்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிகவும் உதவுகின்றன. இந்த உயிராற்றல் விவசாயம் முறை மண்ணில் நுண்ணுயிர்களின் அளவை மிக வேகமாக அதிகரிக்கச் செய்கிறது.
அதோடு இந்தப் பிரபஞ்சத்தில் நிலையாக இருக்கும் இராசி மண்டலங்களிலும் மற்ற கிரகங்களில் இருந்து வெளிப்படும் ஆற்றல்கள் இணைந்து மண்ணை உயிருள்ளதாக மாற்றுகிறது. ஆகவே மண்ணில் ஏற்படும் இந்த மாறுதல்களுடன் பிரபஞ்ச சக்தியும் (Cosmic Energy) இணைந்து தாவரங்களையும் பிராணிகளையும் ஆராக்கியமானதாக மாற்றி அமைத்து உதவுகிறது.