கரும்புத் தோகையில் உரம் தயாரிக்க என்னென்ன இடுபொருட்கள் தேவை?

What ingredients do you need to make fertilizer in the sugar cane?
What ingredients do you need to make fertilizer in the sugar cane?


கரும்புத் தோகையில் உரம் தயாரிக்க தேவைப்படும் இடுபொருட்கள்...

1.. நுண்ணுயிர் கூட்டுக் கலவை

வேளாண்மை பல்கலைக்கழகம் பயோமினரலைசர் என்ற நுண்ணுயிரிகளின் கூட்டு கலவை மக்குவதை ஊக்குவிக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. 1 டன் கரும்புத் தோகைக்கு 2 கிலோ பயோமினரலைசர் பரிந்துரைக்கப்படுகிறது. 

பயோமினரலைசர் இல்லாமல் மக்கிய உரத்தை மிக விரைவில் தயாரிக்க முடியாது. இது தவிர மற்றொரு இடு பொருள் சாணக் கரைசலாகும். சாணக்கரைசலில் மட்குவதற்கு உகந்த நுண்ணுயிரி குறைவாக இருப்பதால், மட்கும் காலம் அதிகம் ஆகிறது.

2.. கால் நடைக் கழிவுகள்

கோழி எரு, கரிமச்சத்து மற்றும் தழைச்சத்து விகிதத்தை குறைப்பதற்கு ஆதாரமாக பயன்படுகிறது. ஒரு டன் கரும்புத் தோகைக்கு 50 கிலோ சாணம் பரிந்துரைக்கப்படுகிறது. இதை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து பின்பு கரும்புத் தோகையோடு கலக்க வேண்டும். ராக்பாஸ்பேட் 5 கிலோவை ஒரு டன் கழிவுக்கு சேர்ப்பதால், மணிச்சத்தின் அளவு உயர்த்தப்படுகிறது.

3.. குவியல் உருவாக்குதல்

அனைத்து இடுபொருள்களை இட்ட பின்பு, கழிவுகளினால் குவியல் உருவாக்க வேண்டும். இது 4 அடி உயரத்திற்கு இருந்தால் நல்லது. ஏனெனில் குவியலுக்குள் வெப்பம் உருவாக்கப்பட்டு, அது நிலைநிறுத்தப்பட இந்த உயரம் அவசியம்.

4.. கழிவுகளை கிளறிவிடுதல்

கழிவுகளை 15 நாட்களுக்கு ஒரு முறை கிளறி விட வேண்டும். குவியலுக்குள் காற்றோட்டம் இருந்தால் மட்டுமே நன்றாக மக்கும். அது மட்டுமில்லாமல் கீழிருக்கும் கழிவுகள் மேலும், மேலிருக்கும் கழிவுகள் கீழும் திருப்பி விடப்படுகிறது. இதனால் கழிவுகள் முழுவதும் ஒரே சீராக மக்குகிறது.

5.. ஈரப்பதத்தை கட்டுபடுத்துதல்
 
மக்கும் உரம் தயாரிக்கும் முறையில் கழிவுகளில் 60% ஈரப்பதம் தேவைப்படுகிறது. ஈரப்பதம் குறைந்தால் அதில் உள்ள நுண்ணுயிரிகள் அனைத்தும் இறந்துவிடும் அபாயநிலை ஏற்படுகிறது. ஈரப்பதம், மக்குவதற்கு ஒரு முக்கிய காரணியாகும்.

6.. மக்குதல் முதிர்வடையும் நிலை

அளவு குறைதல், மண் வாசனை, பழுப்பு கலந்த கருமை நிறம், இவைகள் மக்குதல் முதிர்வைக் கண்டறிய உதவுகிறது. இந்த நிலையை அடைந்த பிறகு மக்கிய உரத்தை பிரித்து உலற விட வேண்டும். 24 மணிநேரத்திற்கு பிறகு மக்கிய உரத்தை சலிக்க வேண்டும். சலித்த பின்பு கிடைக்கும் கழிவுகளை மறுபடியம் மக்கச் செய்யலாம்.

7.. செறிவூட்டுதல்

மக்கிய உரத்துடன், நுண்ணுயிரிகளான அசிட்டோபாக்டர் அஸோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, மற்றும் சூடோமோனாஸ் ஆகியவற்றை கலப்பதால் அவை மேலும் ஊட்டமேற்றப்படுகிறது. இருபது நாட்களில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகமாகின்றது.

8.. மக்கிய கரும்பு தோகையின் சத்துக்களின் அளவு

செறிவூட்டப்பட்ட மக்கிய உரம் எக்டருக்கு 5 டன் பரிந்துரைக்கப்படுகிறது. இது வயலில் உழப்பட்டு மீண்டும் கரும்பு வயலுக்கு உரமாகப் பயன்படுத்தப்படுகிறது.

** மக்கிய உரம் தயாரித்தலின் வரைமுறைகள்...

தோகை உரித்த பொருள்கள் சிறு சிறு துண்டுகளாக ஆக்கப்பட வேண்டும்.

உரம் தயாரிக்க நீண்ட நாட்கள் ஆகிறது.

மக்கிய உரம் தயாரிக்க நிலம் தயாரிக்க நிலம் இல்லாத விவசாயிகள் வயலில் நேரடியாக இட்டு உரமாக்கலாம்.


 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios