What impacts can occur when vegetable crops decrease?
காய்கறிப்பயிர்களில் முக்கியமான மூன்று சத்துகள் உண்டு. அவை, இரும்பு, துத்தநாகம், மேங்கனீசு, போரான். இந்த சத்துகள் குறைந்தால் பாதிப்புகள் அதிகம் ஏற்படும்.
1.. தாமிரச்சத்துக் குறைபாடு மிகவும் குறைந்த அளவிலேயே ஏற்படுகிறது.
2.. மண்ணின் அமிலத்தன்மை அதிகரிக்கும் இடங்களிலேயே மாலிப்டின குறைபாடு தோன்றும். தமிழகத்தின் பெரும்பான்மையான இடங்களில் மாலிப்டின குறைபாடு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைவே.
3.. இரும்புச்சத்துக் குறைவினால் இளம் இலைகள் மஞ்சளாகி பயிரின் வளர்ச்சி குன்றும். பெரும்பாலும் சுண்ணாம்பு சத்து அதிகமுள்ள மண்ணில் இதன் தாக்கம் அதிகம்.
4.. துத்தநாக சத்து இல்லாவிடில் இலைகள் மஞ்சளாகி, செடி உயரம் குறைவாக, வளர்ச்சியற்ற தோற்றம் கொடுக்கும்.
5.. மேங்கனீசு குறைபாட்டினால் இலை நரம்புகளுக்கிடையில் மஞ்சளாகி பின்பு காயத் துவங்கும். அங்கக சத்து குறைந்த மண்ணில் இதன் பாதிப்பு அதிகமிருக்கும்.
6.. போரான் சத்து அளிக்கப்படாவிட்டால் காய்பிடிப்பது குறைந்து, காய்கள் ஒழுங்கற்ற தோற்றம் கொண்டிருக்கும். கொடிவகை காய்களான பீர்க்கன்,பாகல் ஆகியவற்றில் இதன் பாதிப்பு நன்கு வெளிப்படும்.
