Asianet News TamilAsianet News Tamil

அடித்தண்டழுகல் நோய் எவற்றில் ஏற்படுகிறது? எப்படி கட்டுப்படுத்துவது?

What happens in the underlying illness? How to control
what happens-in-the-underlying-illness-how-to-control
Author
First Published Apr 29, 2017, 12:54 PM IST


அடித்தண்டழுகல் நோய்

1.. இது தென்னையில் ஏற்படுகிறது.

2.. அடித்தண்டழுகல் நோய் கேனோடெர்மா லூசிடம் என்ற பூஞ்சாணத்தால் ஏற்படுகிறது.

3.. இவற்றால் பாதிக்கப்பட்ட மரங்களில் அனைத்து குரும்பைகளும், தேங்காய்களும் 7 முதல் 10 நாட்களுக்குள் கொட்டி விடும்.

4.. இந்நோய் மேல்சுற்று மட்டைகளுக்கும் பரவுகிறது. இதனால் எல்லா மட்டைகளும் காய்ந்து விழுவதுடன், குறுத்து பகுதியும் அழுகிவிடும்.

5.. பாளைகள், கூறாஞ்சி ஆகியவை கருகி விடும்.

6.. நோய் தாக்குதலின் முதல் அறிகுறிகள் தெரிய ஆரம்பித்த 2-3  மாதங்களில் மரம் இறந்துவிடும்.

7.. மண்ணின் வெப்பநிலை அதிகரிக்கும்போது இந்நோயின் தாக்குதலும் தீவிரமாகிறது.

கட்டுப்படுத்தும் முறைகள்

1.. ஒரு தென்னந் தோப்பில் மரங்கள் இருந்த போதிலும் ஒன்று அல்லது இரண்டு மரங்களில் மட்டுமே இந்நோயின் தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது.

2.. அடித்தண்டழுகல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகளில் சில தோப்பில் உள்ள அனைத்து மரங்களுக்கும் வட்டப்பாத்தி அமைத்து தனித்தனியே நீர் பாய்ச்சவேண்டும்.

3.. ஒரு மரத்திற்கு பாய்ந்த நீர் அடுத்த மரத்திற்கு போகக்கூடாது.

4.. ஆரியோபஞ்சின் - சால் 2 கிராம் மருந்துடன் 1 கிராம் மயில்துத் தத்தைச் சேர்த்து 100 மில்லி லிட்டர் தண்ணீரில் கலந்துவேர் மூலம் உட்செலுத்தலாம்.

5.. 40 லிட்டர் (1 சதவீதம்) போர்டோ கலவையை மரத்தை சுற்றி 6 அடி விட்டமுள்ள வட்டப்பாத்தியில் ஊற்றியும் இந்நோயை கட்டுப்படுத்தலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios