What can be grown as intercrop in coconut? UNLOCK vaciccut this
தென்னையில் ஊடுபயிராக சேனைக்கிழங்கை பயிரடலாம்
பயிரிட ஏற்ற இரகங்கள்:
கஜேந்திரா மற்றும் ஸ்ரீபத்மா.
பருவம்:
ஏப்ரல், மே மாதங்கள் சேனைக் கிழங்கு நடவு செய்வதற்கு ஏற்ற பருவமாகும்.
விதைப்பு:
ஒரு ஏக்கர் தென்னந்தோப்பில் சேனைக்கிழங்கை நடவு செய்ய 1400 கிலோ கிழங்குகள் தேவைப்படும்.
7.5 × 7.5மீ இடைவெளியுள்ள இரண்டு தென்னை மரங்களுக்கு மத்தியில் 4 வரிசைகளில் சேனைக்கிழங்கை நடவு செய்ய வேண்டும்.
முதலில் 30 × 30செ.மீ அளவுள்ள குழிகள் எடுத்து 10 கிலோ தொழு உரத்தையும் மேல் மண்ணையும் இட்டு குழியினை நிரப்ப வேண்டும்.
இந்தக் குழியில் 20 - 25செ.மீ ஆழத்தில் விதைக் கரணைகளை நடவு செய்ய வேண்டும்.
நட்ட இரண்டு மாதங்களுக்குப் பின்பு எக்டேருக்கு 80 கிலோ தழைச்சத்து, 60 கிலோ மணிச்சத்து, 100 கிலோ சாம்பல்சத்து கொடுக்கக்கூடிய இரசாயன உரங்களை இட வேண்டும்.
எட்டாவது மாதத்தில் கிழங்குகள் முற்றி ஜனவரி, பிப்ரவரியில் அறுவடைக்கு வரும்.
ஒரு எக்டேர் தென்னந்தோப்பில் சேனைக்கிழங்கு ஊடுபயிர் செய்வதால் கிடைக்கும் சராசரி மகசூல் 12 டன். நிகர வருமானம் ரூ.30 ஆயிரம்.
மேலும், சேனைக் கிழங்குகளை நீண்ட நாள்களுக்கு கெடாமல் சேமித்து வைக்க முடியும்.
