நாம் வளர்க்கும் வீட்டுத் தோட்டத்திற்கு தேவையான உரங்கள் என்னென்ன? இதை வாசிங்க தெரியும்...

What are the fertilizers required for our home garden? Know this ...
What are the fertilizers required for our home garden? Know this ...


நாம் வளர்க்கும் வீட்டுத் தோட்டத்திற்கான உரங்கள்...

** புறக்கடைத் தோட்டத்தில் செடிகள் நடுவதற்கு முன்பாக, மண்கலவையை உருவாக்க வேண்டும். 

** நல்ல வளமான மண், தென்னைநார்க்கழிவு, மண்புழு உரம் ஆகிய மூன்றையும் சம அளவு கலந்து, செடி வளரப்போகும் பிளாஸ்டிக் பையில் முக்கால் பங்கு நிரப்பி வைக்க வேண்டும். 

வ்பைகளில் விதை அல்லது நாற்றுகள் என எது நடுவதாக இருந்தாலும், பஞ்சகவ்யா கரைசலில் நனைத்து, விதைநேர்த்தி செய்த பிறகுதான் நடவேண்டும். வேர் சம்பந்தமான நோய்களைத் தடுத்து, தண்டு ஊக்கமாக வளர இது அவசியம். 

** கொடி வகை மற்றும் பழச்செடிகள் நடுவதற்கு பெரிய அளவிலான பைகளைத் தேர்வு செய்துகொள்ள வேண்டும். 

** நம்மைச் சுற்றியுள்ள உபகரணங்களையும், இடுபொருட்களையும் பயன்படுத்தியேகூட எளிய முறையில் வீட்டுத்தோட்டம் அமைக்கலாம்.

** செடியின் வளர்ச்சிக்கும், அதிக மகசூல் பெறுவதற்கும் இயற்கை உரங்களைப் பயன்படுத்த வேண்டும். 

** கடலைப் பிண்ணாக்கு, ஆட்டு எரு, தொழுவுரம் ஆகியவற்றை 15 நாட்களுக்கு ஒரு முறை சரியான விகிதத்தில் கலந்து செடிகளுக்குக் கொடுக்க வேண்டும். தேவைப்படும்போது தலா 25 கிராம் வேப்பம் பிண்ணாக்கையும் கொடுக்கலாம். 

** எறும்பு, எலி வேர்க்கரையான் தாக்குதல்களில் இருந்து செடிகளைக் காப்பாற்ற இது அவசியம். 

** மழைக் காலங்களில் செடிகளின் ஈரத்தன்மையைப் போக்க வேப்பம் பிண்ணாக்கு இடவேண்டும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios