இயற்கை சார்ந்த பூச்சிக் கட்டுப்பாட்டு முறையில் என்னென்ன பயன்கள் இருக்கு?
இயற்கை சார்ந்த பூச்சிக் கட்டுப்பாட்டு முறையில் இருக்கும் பயன்கள்...
** கடந்த சில ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
** சாகுபடிக்கு வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் ஏற்பட்ட நஷ்டமே விவசாயிகளின் தற்கொலைக்கு முக்கிய காரணமாக உள்ளது.
** ரசாயண உரங்களுக்கும், பூச்சிக்கொல்லி மருந்துகளுக்காகவும் விவசாயிகள் செய்யும் செலவு மிகவும் அதிகம்.
** அப்படியிருந்தும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அதிக மகசூல் இழப்பு ஏற்படுகிறது.
** இந்த சூழலில் பூச்சிகளைக் கட்டுப்படுத்த இயற்கை சார்ந்த முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் விவசாயிகளுக்கான சாகுபடி செலவு குறைகிறது.
** மகசூல் இழப்பு தடுக்கப்படுகிறது.
** இயற்கை சார்ந்த நமது சூழலியலும் பாதுகாக்கப்படுகிறது
** எனவே, வயல்களில் உள்ள பூச்சிகளை அழிக்க பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம்.