மட்கு உரத்தால் அப்படி என்னதான் நன்மைகள் கிடைக்கிறது? தெரிஞ்சுக்குங்க...
மட்கு உரத்தின் நன்மைகள்
** குப்பையின் அளவைக் குறைக்கிறது.
** மட்கு உரத்தின் எடை கடைசியில் குறைவாக இருக்கும்.
** மட்கு உரமாக்குதலின் வெப்பநிலை நோய் பரப்பும் கிருமிகள், களை விதைகள் அழிக்கின்றன.
** மட்கு உரம் மண்ணுடன் சமநிலையை ஏற்படுத்துகிறது.
** மட்கு உரம் தயாரித்தலின் போது, பல ஆதாரங்களிலிருந்து எண்ணற்ற கழிவுகள் ஒன்றாகக் கலக்கப்படுகின்றன.
** மண்ணை பக்குவப்படுத்துகிறது.
** விற்பனை செய்யக்கூடிய பொருளாக பயன்படுகிறது.
** உரம் கையாளுவதை மேம்படுத்துகிறது.
** மாசுபடுதலைக் குறைக்கிறது.
** நோய் பரப்பும் கிருமியைக் குறைக்கிறது.
** கூடுதல் வருமானம் தருகிறது.
** பயிர் நோய்கள் மற்றும் பூச்சிகளை அழிக்கின்றன.
** இரசாயன உரத்தின் தேவையைக் குறைக்கிறது.
** வேளாண் பயிர்களில் விளைச்சலை அதிகப்படுத்துகிறது.
** காடுகள் மறுஅமைப்பு, நிலங்களை நீருடன் வைத்திருத்தல், சூழ்நிலை மறுவாழ்வு போன்ற மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
** கேடு விளைவிக்கும் குப்பைகளால் ஏற்படும் மாசுபடுதலை குறைக்கிறது.
** பாய்ச்சும்போது திடப்பொருட்கள், எண்ணெய், ஆகியவற்றை நீக்குகின்றன.
** மாசுபட்ட காற்றில் உள்ள தொழிற்சாலை அங்ககப் பொருட்களை 99.6% பிடித்து, அழிக்கின்றன.
** மண், நீர், காற்று மாசுபடுதல் தீர்க்கும் தொழில்நுட்பங்களால் 50% செலவை குறைக்கிறது.