பல பருவ தாவரங்களை எவையவை? அவற்றை எப்படி நட வேண்டும்? 

What are many seasonal plants? How should they be done?
What are many seasonal plants? How should they be done?


பல பருவ தாவரங்களை மற்ற பயிர்களில் நிழல் படியாதவாறும், ஊட்டச்சத்திற்கு போட்டி ஏற்படாதவாறும் தோட்டத்தின் மூலையில் நடவேண்டும்.

தோட்டத்தின் நடுவில் உள்ள நடைபாதை மற்றும் ஏனைய நடைபாதையின் அருகிலும் குறுகிய கால பயிர்களான கொத்தமல்லி, புதினா, பொன்னாங்கன்னி, பாலக் போன்றவற்றை நட வேண்டும்.

ஊடுபயிராக தண்டுகீரை, சிறுகீரை பயிர் செய்யவும்.

பலவருட பயிர்கள்

முருங்கை, வாழை, பப்பாளி, கப்பக்கிழங்கு, கருவேற்பிலை, அகத்தி.

பயிரிடும் திட்டம்

இந்திய சூழ்நிலைக்கு ஏற்ற ஒரு மாதிரி வீட்டுக் காய்கறி தோட்டத்திற்கான பயிரிடும் திட்டமுறை (மலை பகுதி தவிர)

தக்காளி மற்றும் வெங்காயம் –  ஜுன் – செப்டம்பர்

முள்ளங்கி –  அக்டோபர் – நவம்பர்

பீன்ஸ் – டிசம்பர் – பிப்ரவரி

வெண்டைக்காய் – மார்ச் – மே

கத்தரி  –  ஜுன் – செப்டம்பர்

பீன்ஸ் –  அக்டோபர் – நவம்பர்

தக்காளி – ஜுன் – செப்டம்பர்

தண்டுகீரை, சிறுகீரை –  மே

மிளகாய் மற்றும் முள்ளங்கி – ஜுன் – செப்டம்பர்

தட்டவரை / காராமணி – டிசம்பர் – பிப்ரவரி

பெல்லாரி வெங்காயம் –  மார்ச் – மே

வெண்டைக்காய் மற்றும் முள்ளங்கி  – ஜுன் – ஆகஸ்டு

முட்டைக்கோஸ் –  செப்டம்பர் – டிசம்பர்

கொத்தவரை –  ஜனவரி – மார்ச்

பெரிய வெங்காயம்  –  ஜுன் – ஆகஸ்டு

பீட்ருட் –  செப்டம்பர் – நவம்பர்

தக்காளி –  டிசம்பர் – மார்ச்

வெங்காயம்  –  ஏப்ரல் – மே

மேற்கண்ட திட்டமுறையில் வருடம் முழுவதிற்கும் ஒவ்வொரு பாத்தியிலும் சில பயிர்களை இடைவிடாது இடம் பெறச்செய்யப்பட்டுள்ளன. முடிந்த அளவு ஒவ்வொரு பாத்தியிலும் ஒரு நெடுங்கால பயிரும், குறுகிய கால பயிரும் இணைக்கப்பட்டுள்ளன.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios