இயற்பியல் முறையிலும் பூச்சிகளை கட்டுப்பாடுத்தலாம்…
1.. பூச்சிகள் 60 - 660c வெப்பநிலையில் கொல்லப்படுகின்றன. இம்முறையைப் பயன்படுத்தி சேமிப்பு தானிய பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
2.. வெப்ப நீரில் (520c) நெல் விதைகளை 10 நிமிடங்கள் வரை ஊற வைப்பதன் மூலம் விதை மூலம் பரவும் இலைப்புள்ளி நோயின் காரணிகளைப் கட்டுப்படுத்தலாம்.
3.. நெல் விதைகளை 500c முதல் 550c வெப்பநிலையில் 15 நிமிடம் வரை சிகிச்சைக்கு உட்படுத்துவதால் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.
4.. அதிக சூரிய வெப்பத்தில் கோதுமை விதைகளை காய வைப்பதன் மூலம் கரிப்பூட்டை நோயின் பூசணத்தைக் கட்டுப்படுத்தலாம்.
5.. எறும்புகள் ஏறுவதைக் தடை செய்ய தண்ணீர்த் தடை ஏற்படுத்தலாம்.
6.. பயிர் செய்யப்பட்ட வயலைச் சுற்றிலும் கம்பி வேலிகள் அமைத்து அதில் குறைந்த மின் அழுத்தமுள்ள மின்சாரத்தைச் செலுத்தி எலி மற்றும் பிற விலங்குகளின் தாக்குதலைத் தவிர்க்கலாம்.
7.. பயிர் விதைகளின் ஏதாவது ஒரு தாவர எண்ணெய் பூச்சுக் கொடுத்து சேமித்து வைத்தால் பயறு வண்டுகள் விதைகளின் மீது முட்டையிடுவதை தடை செய்யலாம்.