பால் அதிகரிக்க பசுவைத் தடவிக் கொடுங்கள்…
Veterinarmedizinische Universitat Wien ஆராய்சியாளர்கள் பசுக்களை பற்றி ஆய்வு மேற்கொண்டனர். அதில் பசுக்களின் பால் உற்பத்தியை பெருக்குவதற்கு அந்த பசுவினை நம் கையினால் தடவி கொடுத்தால் போதும் என்பதனை கண்டறிந்துள்ளனர்.
இதேப் போல கன்றின் வளர்ச்சியை அதிகரிக்க அதன் கழுத்தில் தடவினால் போதும் அதன் வளர்ச்சி அதிகரிக்கிறது என்பதையும் கண்டறிந்துள்ளனர். இதனை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள 90 நாட்கள் தொடர்ந்து பசுவினையும், கன்றையும் கையினால் அதன் கழுத்தை தடவி கொடுத்தனர். அதன் பிறகு அதன் எடையினை சோதித்து பார்த்ததில் எடை அதிகரித்தது தெரிய வந்தது என்று லுர்சல் கூறினார்.
இதன் மூலம் விலங்கு மற்றும் மனிதர்களுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதனை பற்றி தெரிந்து கொள்ள கடந்த 2013-ம் ஆண்டில் நடத்தபட்ட ஆய்வினை சோதித்ததிலும் பசுவின் வளர்ச்சி 3% மற்றும் பால் உற்பத்தி வருடத்திற்கு 50kg அதிகரித்தது கண்டறியப்பட்டது.