கோடைப்பட்டத்தில் நல்ல வருவாய் வேண்டுமா? அப்போ இதை சாகுபடி செய்யுங்கள்..

Want a good income on the summer So lets cultivate this.
want a-good-income-on-the-summer-so-lets-cultivate-this


கோடைப்பட்டத்தில் நல்ல வருவாயினைத் தருவது பிஞ்சு வெள்ளரி. இதனை சாகுபடி. செய்துசிறு விவசாயிகளுக்கு நல்ல வருவாய் பெறலாம். இந்த சாகுபடியை அரை ஏக்கர் அல்லது ஒரு ஏக்கர்தான் செய்ய இயலும்.

பிஞ்சு வெள்ளரி சாகுபடி

** பிஞ்சு வெள்ளரி சாகுபடி என்பது வெள்ளரிக்காய் பிஞ்சாக இருக்கும்போதே அறுவடை செய்து விற்று பயன்பெறும் தொழிலாகும்.

** இதன் வயது 90 நாட்கள்.

** பிஞ்சினை அப்படியே விட்டால் அது மிகப்பெரிய காயாகி அதிக விதைகளைக் கொண்டிருக்கும். இதனை விற்று லாபம் எடுக்க முடியாது.

** மிகச்சிறிய பிஞ்சுகள், நீளம் ஆறு அங்குலத்திற்குள் இருக்கும். இவைகள் மிகச்சுவை கொ\ண்டதாக இருக்கும். ஒரு விதைகூட காயில் இருக்காது.

** இத்தகைய காய்களை விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கிலோ ரூ.10 கொடுத்து வாங்கி பின்னால் தாங்கள் காய்களை கிலோ ரூ.15 வரை விற்கின்றனர்.

** இரண்டாம் தரக் காய்கள் 9 அங்குலம் நீளம் வரை இருக்கும். இதன் விலை கிலோ ரூ.10 வரை இருக்கும்.

சாகுபடி செய்வது எப்படி?

** விவசாயி தனது நிலத்தை டிராக்டர் கொண்டு ஒரு உழவு செய்துவிட்டு நிலத்திற்கு மூன்று டிரெய்லர் லோடு மக்கிய தொழு உரத்தை இட்டு அதனை வயல் பூராவும் மண்ணோடு சீராக கலக்க உழுதுகொள்கிறார்.

** பிறகு ஏக்கரில் 600 குழிகள் போட்டுக்கொள்கிறார். நிலத்திற்கு அடியுரமாக ஒன்று – ஒன்றரை மூடை பேக்ட் அம்மோபாஸ் உரத்தைப் போட்டு மண்ணோடு கலக்குகிறார்.

** நிலத்திலுள்ள குழிகளில் இயற்கை உரமும் ரசாயன உரமும் உள்ளது.

** உடனே குழிக்கு மூன்று விதைகள் விதைத்து தண்ணீர் ஊற்றுகிறார்.நிலத்திலுள்ள குழிகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் விடுகிறார்.

** இவ்வாறு 15 நாட்கள் செய்துவிட்டு பிறகு நிலத்தில் கால்வாய் போட்டு பாசனம் செய்கிறார்.

** குழிகள் அனைத்திற்கும் ஏக்கருக்கு ஒன்று – ஒன்றரை மூடை பாரமாபாஸ் 20:20 உரம் இடுகிறார்.

** குழிகளில் களைச்செடிகளை குச்சிகள் உபயோகித்து அகற்றுகிறார்.

** செடிகள் நன்கு பூக்கள் பிடித்து காய்கள் காய்க்கத் தொடங்கும். சாகுபடி சமயம் விவசாயி தனது பயிரினை பூச்சிகள், பூஞ்சாளங்கள் தாக்காமல் இருக்க தக்க பயிர் பாதுகாப்பு முறைகளை அனுசரிக்கிறார்.

** பிஞ்சு வெள்ளரி பயிரின் மொத்த வயது 90 நாட்கள்.

** இந்த சாகுபடியில் பயிரில் விதைத்த 45வது நாளிலிருந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் அறுவடையில் கீழ்க்கண்டபடி வருமானம் கிட்டுகின்றது.

** இதனால் லாபம் மட்டுமே 25 ஆயிரம் கிடைக்கும்.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios