எந்த நிலத்திலும் வளரும் திறன் படைத்தவை. இதன் விதைகள் கால்நடைகளுக்கு குருணையால் கொடுத்தால் புரதச்சத்து கிடைக்கும்.

இம்மரங்கள் காற்றில் உள்ள ஈரத்தை உறிஞ்சி வளரும் தன்மை படைத்தவை. உரிய முறையில் வெட்டி வளர்த்தால் நல்ல வேலியாக அமையும்.

மரங்கள் வேரூன்றி விட்டால் அழிப்பது கடினம். இம்மரத்தின் முட்கள் விஷமுள்ளவை. ஆறாத புண்ணை உண்டாக்கும்.

கரி சுட்டு விற்பனை செய்ய ஏற்றவை. வெட்ட வெட்ட மீண்டும் மீண்டும் வளரும் திறன் படைத்தவை. இம்மரத்தடியில் புல் பூண்டுகள் வளர்வது கிடையாது.

காட்டு கருவேல் மரங்கள் அதிக கரியமில வாயுவை வெளியிட்டு சுற்றுச்சூழலை கெடுக்கின்றன. இவை வளரும் நிலங்களின் நீரை உறிஞ்சி நிலத்தை மலடாக்கும் கொடும் தன்மை கொண்டது.

எனவே இம்மரங்களை ஒழிப்பது நன்மை ஏற்படுத்தும்…