ஆழ்கூள வளர்ப்பு முறையில் கோழிகளுக்கான கொட்டகைகளை எப்படி அமைப்பது?
ஆழ்கூள வளர்ப்பு முறை
இந்த முறையில் கோழிகள் எப்போதும் கொட்டகையிலேயே வைத்து பராமரிக்கப்படுகின்றன. தீவனம், தண்ணீர் மற்றும் கூடுகள் போன்றவை கொட்டகையிலேயே அளிக்கப்படுகின்றன.
கொட்டகையின் தரையில் கோழிகளுக்குத் தேவையான ஆழ்கூளத்தை 3 முதல் 5 அடி உயரத்திற்கு இடவேண்டும்.
பொதுவாக நெல் உமி, மரத்தூள், கடலைப்பொட்டு, நறுக்கப்பட்ட வைக்கோல், போன்றவை ஆழ்கூளப் பொருட்களாகப் பயன்படுகிறது. இதனால் பண்ணையில் வேலையாட்கள் கோழிகளின் எச்சத்தை சுத்தம் செய்யும் நேரம் குறைவு.
பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை ஆழ்கூளப் பொருட்களை இரண்டு அடி உயரத்திற்கு போடவேண்டும்.
இந்த முறையால் ஏற்படும் நன்மைகள்
** வைட்டமின் பி2 மற்றும் வைட்டமின் பி 12 போன்றவை ஆழ்கூளத்தில் பாக்டீரியாக்களின் செயல்பாடு காரணமாக இயற்கையாக கோழிகளுக்கு கிடைக்கிறது.
** கோழிகளின் நலன் ஓரளவு பாதுகாக்கப்படுகிறது.
** கோழிக்கொட்டகையில் பயன்படுத்தப்பட்ட ஆழ்கூளம் ஒரு சிறந்த உரமாகப் பயன்படுகிறது.
** கூண்டு வளர்ப்பு முறையினை விட இம்முறையில் ஈக்களின் மூலம் ஏற்படும் தொல்லை குறைவு.
இந்த முறையால் ஏற்படும் தீமைகள்
** கோழிகளுக்கும் ஆழ்கூளத்திற்கும் நேரடியாகத் தொடர்பு இருப்பதால் கோழிகளுக்கு பாக்டீரியா மற்றும் ஒட்டுண்ணிகளால் ஏற்படும் நோய்களின் தாக்குதல் அதிகம்.
** ஆழ்கூளத்திலிருந்து தூசுகள் வருவதால் கோழிகளுக்கு சுவாச மண்டலம் சார்ந்த கோளாறுகள் ஏற்படும்.
** ஆழ்கூளத்திற்காக செய்யப்படும் செலவு ஒரு அதிகப்படியான செலவினமாகும்.
** காற்றோட்டம் குறைவாக இருந்தால் கோழிகளுக்கு கூண்டு முறையில் ஏற்படும் பாதிப்புகளை விட ஆழ்கூள முறையில் ஏற்படும் பாதிப்பு மிகவும் அதிகம்.