இரு விதையிலைத் தவார சாகுபடிக்குப் பிறகு எவற்றை பயிரிடலாம்? இதை படிங்க தெரியும்…

use these crops for rotational cultivation
use these crops for rotational cultivation


 

இரு விதையிலைத் தவார சாகுபடிக்குப் பிறகு:

இரு விதையிலைத் தவாரங்களை சாகுபடி செய்த விவசாயிகள் அடுத்தபடியாக ஒரு விதையிலைத் தாவரங்களைப் பியிரட வேண்டும். ஊடுபயிர் இல்லாத தனிப் பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் அரிதாள் கட்டை விடும் பயிர்களை சாகுபடி செய்வது சிறந்தது.

பூச்சித் தாக்குதலில் இருந்து காக்க:

சில வகை பூச்சிகள்  குறிப்பிட்ட பயிர்களைத் தாக்கும் ஆற்றல் கொண்டவை. எனவே, அத்தகையப் பயிர்களைப் பயிரிடும் விவசாயிகள் அடுத்த முறை அதற்கு மாற்றாக உள்ள பயிர்களைத் தேர்வு செய்ய வேண்டும். சில பயிர்களில் குறிப்பிட்ட வகை களைச் செடிகள் தொர்ந்து முளைத்த வண்ணம் இருக்கும். இதனைக் கட்டுப்படுத்த சுழற்சி முறை பயிர் சாகுபடி அவசியமானது. மேய்ச்சல் பயிர்களுக்குப் பிறகு தீவனம் அல்லது விதைப் பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும்

பாராபுல், சோளம், அவரை, நெல் என வரிசைப்படுத்திக் கொள்ளலாம்.

சுத்தப்படுத்தும் தாவரங்களுக்குப் பிறகு:

சுத்தப்படுத்தும் தாவரங்களுக்குப் பிறகு விதைத் தாவரங்களை தேர்வு செய்ய வேண்டும். மக்காச் சோளம், நிலக்கடலை, வெங்காயம், அவரை, கம்பு என திட்டமிடல் வேண்டும். ஒரே வகை பயிர்களை சாகுபடி செய்யாமல் மேற்கண்டபடி சுழற்சி முறையில் பயிர்களை சாகுபடி செய்தால் விவசாயிகளுக்கு மிகுந்த லாபத்தை ஈட்டித் தரும். மண் வளமும் பாதுகாக்கப்படும். மேலும், விவரங்களுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios