உளுந்து, பாசிப்பயிர்களை உடனடியாக விற்க செய்ய வேண்டியவை…
உளுந்து, பாசிப்பயறுகளை உடனடியாக விற்பது நல்லது என தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழத்தை சேர்ந்த தஞ்சாவூர் மண் மற்றும் நீர் மேலாண்மை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
பயறு வகைகளில் உற்பத்தி கடந்த ஆண்டைவிட நிகழாண்டு சற்று குறைவு. என்றாலும் விலை சீராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆய்வு முடிவுகளின்படி, ஏப்ரல், மே மாதங்களில் உளுந்து விலை கிலோவுக்கு ரூ.34/- லிருந்து ரூ.37/- என்றும் பாசிப்பயிறின் விலை ரூ.34/- லிருந்து ரூ.36/- என்ற அளவில் இருக்கும் என அறியப்படுகிறது. மே மாத இறுதி வரை விலை ஏற வாய்ப்புகள் இல்லை. எனவே விவசாயிகள் அறுவடை செய்யும் உளுந்தையும், பாசிப்பயறையும் சேமித்து வைக்காமல் உடனடியாக விற்பனை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.