இந்த மூன்று வகை செம்மறியாட்டு இனங்களைப் பற்றி கேள்விப்பட்டதுண்டா?
1.. சென்னை சிவப்பு
இவ்வினம் தமிழ்நாட்டின் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் காணப்படுகின்றது.
இறைச்சி உற்பத்திக்காகப் பயன்படுகின்றது
சிவப்பு நிறம், இளம்சிவப்பு முதல் கரும்சிவப்பு வரை கொண்டது
சில ஆடுகளுக்கு முன்நெற்றி, அடிவயிறு மற்றும் கால்களுக்கிடையில் வெள்ளைநிறம் காணப்படும்
வளர்ந்த கிடா 36 கி.கி எடையுடனும், பெட்டை ஆடுகள் 24 கி.கிஎடையுடனும் இருக்கும்.
2.. இராமநாதபுரம் வெள்ளை
இவ்வினம் தமிழ்நாட்டின் இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் காணப்படுகின்றது.
இறைச்சி உற்பத்திக்காக பயன்படுகிறது
நடுத்தர உடலமைப்பைக் கொண்டது
பெரும்பாலும் வெள்ளை நிறத்திலிருந்தாலும் சில ஆடுகளில் உடல் முழுவதும் கருமைநிறப் பட்டைகள் காணப்படும்
கிடாவுக்கு முறுக்கிய வளைந்த கொம்புகள் உண்டு, பெட்டைக்கு கொம்புகள் கிடையாது.
கால்கள் சிறியதாகவும், மெலிந்தும் காணப்படும்
வளர்ந்த கிடா 31 கி.கி எடையுடனும், பெட்டை ஆடுகள் 23 கி.கி எடையுடனும் இருக்கும்
3.. மேச்சேரி
இவ்வினம் தமிழ்நாட்டின் சேலம் கரூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களிலும், தருமபுரி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளிலும் காணப்படுகின்றது.
இறைச்சி உற்பத்திக்காகப் பயன்படுகிறது
நடுத்தர உடலமைப்பு கொண்டது. இதனுடைய தோல் வெளிறிய சிவப்பு நிறத்தில் இருக்கும்.
கிடாவுக்கும், பெட்டை ஆடுகளுக்கும் கொம்புகள் கிடையாது
வால் குட்டையாகவும், மெலிதாகவும் இருக்கும்
வளர்ச்சியடைந்த கிடா 36 கி.கி எடையுடனும், பெட்டை ஆடுகள் 22 கி.கி எடையுடனும் இருக்கும்.