** தக்காளி மேலை நாட்டு பயிர். அனைத்து பட்டங்களிலும் பயிரிடலாம். முதலில் தக்காளி செடிகள் அழகிற்காக வளர்க்கப்பட்டன. பின்னர் சமையல் பயன் பாட்டுக்கு வந்தன. தக்காளி உலகம் முழுவதும் சமயலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

** தக்காளியில் பல ரகங்கள் இருந்தாலும் நாட்டு ரகங்களுக்கு நல்ல சந்தை வாய்ப்பு உண்டு. ஏக்கருக்கு 150 கிராம் விதை தேவை. மேட்டு பாத்திகளில், முதலில் நன்கு கொத்தி மண்புழு உரத்துடன் சிறிது தொழுஉரம் கலந்து பாத்திகளில் தூவி அதனுடன் இரண்டு கிலோ வேப்பம்புண்ணாக்கு கலந்து தெளிக்கவும். அதனுடன் ஒரு பாத்திக்கு அரை கிலோ சுண்ணாம்பு தூள் கலக்க வேண்டும்.

** பின்னர் நிலத்தை சமன் படுத்தி ஒன்றரை அங்குலம் இடைவெளியில் கோடுகள் கிழித்து அதில் விதைகளை தூவி அதன் மீது வைக்கோல் மூடாக்கு இட்டு தண்ணீர் தெளிக்க வேண்டும். ஏழாவது நாள் முதல் விதைகள் முளை விட ஆரம்பிக்கும். அப்போது மூடாக்கை நீக்கி விடலாம். தக்காளியின் வயது 150 நாட்கள்.

** வயலில் இருபது முதல் இருபத்தைந்து நாட்களான நாற்றுகளை நடலாம். நாற்று நடும்பொழுது இடைவெளி 60×30 செமி இருக்குமாறு நடவு செய்யவேண்டும். பார்கள் ஒரங்களில் நடவு செய்ய வேண்டும். நாற்று நட்ட பதினைந்தாவது நாள் முதல் களை எடுக்க வேண்டும்.

** மீன் அமிலம் தண்ணீரில் கலந்து வேரில் ஊற்றினால் விரைவாக வளரும். தொடர்ந்து மேம்படுத்தப்பட்ட அமிர்தகரைசல் பயன்படுத்தினால் நல்ல மகசூல் பெறலாம். நூற்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும். 1:4 என்ற விகிதத்தில் இக்கரைசலை தண்ணீருடன் கலந்து செடிகள் மீது தெளித்தால் பூக்கள் உதிர்வதை முற்றிலும் தடுக்கலாம்.

** கற்பூரகரைசல் தொடர்ந்து தெளித்பதால் தக்காளியை தாக்கும் அசுவினி, இலைக்கருகல், புரொட்டீனியா காய்புழு முதலிய நோய்களை முற்றிலும் தடுக்கலாம். அதிகமான பூக்கள் தோன்றும். செடிகள் கரும் பச்சை நிறத்தில் வளரும். தேவை பட்டால் தேங்காய் பால் புண்ணாக்கு கரைசல் தெளிக்கலாம். நீர் பாசனம் மண் தன்மைக்கு ஏற்ப மாறுபடும்.

** தக்காளியில் நட்ட இருபது நாளில் பூக்கள் தோன்ற ஆரம்பிக்கும். அறுபது நாளில் பழங்கள் அறுவடை செய்யலாம். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தக்காளி அறுவடை செய்யலாம். இருபது டன் வரை ஏக்கருக்கு மகசூல் வர வாய்ப்பு உண்டு.