கிடா ஆடுகளை தேர்ந்தெடுக்க சில அட்டகாசமான டிப்ஸ்...
கிடா ஆடுகள் தேர்வு செய்தல்
கிடாக்கள் நல்ல உடல் தொழில் அமைப்பும் வலுவும் பெற்றிருக்கும். நாம் தெரிவு செய்யும் கிடா நல்ல இனப்பெருக்கத் திறனுடையதாக இருக்கவேண்டும்.
விலா எலும்புகள் நல்ல ஆழத்துடனும் கால்கள் நேராக உடலை நன்கு தாங்கக்கூடியதாக இருத்தல்வேண்டும்.
பொதுவாக கிடா ஆடுகள் கொம்பு நீக்கப்பட்டவையாக இருத்தல் நலம். மேலும் நல்ல ஆரோக்கியத்துடனும் எந்த ஒட்டுண்ணிகள் பாதிப்புமின்றி இருத்தல்வேண்டும்.
கிடாவனாது நல்ல பால்தரக்கூடிய இனத்திலிருந்து தேர்வு செய்தல் அவசியம். கிடாக்கள் அதிக சதைப்பற்றுடன் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அதன் இனப்பெருக்கத் திறன் அதிகமாக இருத்தல் வேண்டும்.
நன்கு பராமரிக்கப்பட்ட கிடாவை அதன் முதல் இனச்சேர்க்கை காலத்தில் 5-6 பெட்டை ஆடுகளுடன் சேர்க்கலாம் (6 மாத வயதில்) 18-24 மாதக் காலத்தில் 25-30 பெட்டைகள் வரை சினைப்படுத்தும் திறனும், நன்கு முதிர்ந்த, நல்ல இனப்பெருக்க காலத்தில், 50-60 ஆடுகளுடன் இனச்சேர்க்கை செய்யும் திறனும் பெற்றது.