கோழிகளை வளர்க்க நினைப்போர் இந்த நவீன முறையில் கூட வளர்க்கலாம்... 

Those who want to develop chickens can also grow in this modern way ...
Those who want to develop chickens can also grow in this modern way ...


தீவிர முறை வளர்ப்பு 

இந்த முறையில் கோழிகள் கொட்டகைகளில் முழுவதும் அடைத்து வளர்க்கப்படுகின்றன. கொட்டகைகளில் தரையிலோ அல்லது கம்பி வலைகளின் மீதோ அல்லது கூண்டுகளிலோ கோழிகளை வளர்க்கலாம். இம்முறை ஒரு சிறந்த, வசதியான, செலவு குறைந்த, அதிக எண்ணிக்கையில் கோழிகளை வளர்க்கும் நவீன முறையாகும்.

நன்மைகள்

பண்ணை அமைக்க குறைந்த இடமே தேவைப்படும்

சந்தைக்கு அருகிலேயே பண்ணைகளை அமைக்கலாம்.

தினந்தோறும் பண்ணையை மேலாண்மை செய்வது எளிது.

கோழிகளின் நடமாட்டம் தீவிர முறை வளர்ப்பில் குறைவாக இருப்பதால் கோழிகளின் உற்பத்தித் திறனும் அதிகரித்து, அதிக அளவு சக்தியும் சேமிக்கப்படுகிறது.

அறிவியல் முறையில் கோழிகளை வளர்க்கலாம். அதாவது இனப்பெருக்கம், தீவனமளித்தல், மருந்துகளை அளித்தல், கோழிகளைப் பண்ணையிலிருந்து நீக்குதல் போன்ற மேலாண்மை முறைகளை சுலபமாகவும், துல்லியமாகவும் செய்யலாம்.

நோயுற்ற கோழிகளை எளிதில் கண்டறிந்து தனியாகப் பிரித்து சிகிச்சை அளிக்கலாம்.

தீமைகள்

கோழிகளின் இயற்கையான குணநலன்களான இறக்கைகளை விரித்தல், தரையை கால்களால் பிரண்டுதல் போன்றவை பாதிக்கப்படுகிறது.

வெளிப்புற சூரிய ஒளி, தீவன ஆதாரங்கள் போன்றவை கோழிகளுக்குக் கிடைக்காததால் அவற்றுக்கு சரிவிகித தீவனத்தை அளிப்பதால் மட்டுமே அவற்றுக்கு சத்துப் பற்றாக்குறை நோய்களைத் தடுக்கலாம்.

நோய் பரவுவதற்கான வாய்ப்பு அதிகம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios