சித்திரை பட்டமான இந்தப் பட்டத்தில் உளுந்து பயிரிட்டால் நல்ல மகசூல் பார்க்கலாம்.

சித்திரைப் பட்டம் தான் உளுந்து பயிரிட ஏற்ற தருணம்.

ஆடுதுறை - 5 உளுந்து ரகத்தை பயிரிடலாம்.

உளுந்து தண்ணீர் காட்ட வேண்டுமே தவிரக் கட்டக் கூடாது.

தமிழக அரசு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் வழங்கி வரும் ரெயின்கண், தெளிப்பு நீர் பாசன கருவி போன்றவற்றை நிலத்தில் இரு இடத்தில் பொருத்தினால் அவைகள் சுற்றி, சுற்றி வந்து தண்ணீரை நிலத்தில் பீய்ச்சி அடிக்கும். இதனால் பயிருக்கு தேவையான தண்ணீர் மட்டுமே கிடைக்கும்.

மேலும், 50 சதவீதம் மானியத்தில் நுண்ணூட்டச் சத்துகளும், இனக் கவர்ச்சி பொறிகளையும் வேளாண் துறை வழங்குகிறது.

இதுதவிர தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் விதைக்கு கிலோவுக்கு ரூ.12 மானியம் வழங்கப்படுகிறது. உளுந்துக்கு தேவையான உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருத்துகளை அருகில் உள்ள வேளாண் அலுவலகத்தில்ன் ஆலோசனைப்படி செய்வது நல்லது.

இப்போது உளுந்து நல்ல விலைக்கு போவதால் விவசாயிகள் உளுந்து பயிர் சாகுபடி செய்தால் நல்ல லாபமும் பார்க்கலாம்.

மேலும் சாகுபடி செலவும் குறைவு. ஆட்கள் கூலியும் குறைவு.