வெப்ப மண்டல பயிரான நிலக்கடலையை இப்படிதான் சாகுபடி செய்யணும்…
நிலக்கடலை ஒரு வெப்ப மண்டல பயிர். இந்தியா நிலக்கடலை உற்பத்தியில் முதலில் உள்ளது. பூமிக்கடியில் தலை வைத்து வெளியே இலை விடுகிற தாவரம், வேர்க்கடலை.
இதன் இலைகள் செடியில் பழுத்து மஞ்சள் நிறமடைந்த இரண்டு மாதங்களில் வேர்க்கடலை முற்றிக் கிடைக்கிறது.
1. அடியில் பத்து டன்கள் தொழுஉரம் இட்டு உழவு செய்யலாம் அல்லது சணப்பை ஏக்கருக்கு இருபது கிலோ விதைத்து நன்கு வளர்ந்து பிஞ்சுகள் தோன்றும் சமயத்தில் மடக்கி உழவு செய்து பின் கடலை விதைக்கலாம்.
2. தமிழகத்தில் பல ரகங்கள் உள்ளன, திண்டிவனம் மற்றும் விருத்தாசலம் வேளாண் ஆராய்ச்சி நிலைய ரகங்கள் பிரபலமானவை. இதில் ஜேஎல் 24 என்ற குஜராத் மாநில ரகம் ஒரு புரட்சியை விளைச்சலில் ஏற்படுத்தியது.
3. ஏக்கருக்கு கிட்டத்தட்ட ஐம்பது கிலோ விதை போதுமானது. ஏர் அல்லது டிராக்டர் மூலம் விதைக்கலாம். கண்டிப்பாக போதுமான ஈரப்பதம் வேண்டும். ஏழாவது நாள் முளைக்கும். இடைவெளி வரிசைக்கு வரிசை இருபத்தைந்து செ.மீ செடிக்கு செடி பதினைந்து செ.மீ. ஒரு சதுரமீட்டரில் முப்பது செடிகள் போதுமானது.
4. விதைநேர்த்தி சாதாரணமாக கோமியம் மற்றும் தண்ணீர் கலந்து ஒரு மணி நே ரம் ஊறவைத்து பின் விதைக்கலாம். அல்லது ஒரு ஏக்கர் க்கு உண்டான விதைகடலைக்கு மூன்று கிலோ கிளிஞ்சல் சுண்ணாம்பு தூள் கலந்து விதைக்கலாம். இதனால் வேர் சம்பந்தப்பட்ட நோய்கள் தாக்காமல் முற்றிலும் தடுக்கலாம்.
5. இருபதாம் நாள் முதல் பூக்கள் தோன்ற ஆரம்பிக்கும். இரண்டு களைகள் போதுமானது. அதாவது முளைத்து பதினைந்தாவது நாள் முதல் களை மற்றும் நாற்பதாவது நாள் இரண்டாவது களை இரண்டாவது களை வெட்டும் போது ஏக்கருக்கு நூறு கிலோ ஜிப்சம் இட்டு மண் அனைக்க வேண்டும்.
6. அதிகம் தாக்கும் பூச்சிகள் சிகப்பு கம்பளிபுழு ,புரோட்டீனியா புழு, பேன்.கற்பூரகரைசல் ஆரம்பம் முதல் தெளித்தால் இந்த பூச்சிகளை முற்றிலும் எளிதாக தவிர்க்கலாம். இரண்டாவது கற்பூரகரைசல் தெளித்தால் அளவிற்கு அதிகமான பூக்கள் தோன்றும்.
7. நிலக்கடலை பயிருக்கு அதன் வாழ்நாளில் ஐந்து தடவை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. முற்றிலும் இயற்கை முறையில் சாகுபடி செய்யும் போது நான்கு முறை பாய்ச்சினால் போதுமானது.
8. மேம்படுத்தப்பட அமிர்த கரைசல் தொடர்ந்து கொடுப்பதன் மூலம் அதிக மற்றும் திரட்சியான காய்களை பெறலாம்.
9. முதல் களை வெட்டி பின் தண்ணீர் பாய்ச்சி ய மறுநாள் ஏக்கருக்கு மூன்று லிட்டர் ரைசோபியம், மூன்று லிட்டர் பாஸ்போபாக்டீரியா, மூன்று லிட்டர் பொட்டாஷ் பாக்டீரியா, பதினைந்து கிலோ VAM ஆகியவற்றை மக்கிய தொழுஉரத்துடன் கலந்து ஈரத்தில் வயலில் மாலை வேளையில் இட்டால் ஆதிக விளைச்சல் பெறலாம்.
10. 110 நாட்களில் அறுவடைக்கு வரும்.