இயற்கை முறையில் மரவள்ளி சாகுபடி செய்ய இதுதான் சரியான வழி...

This is the right way to tap the traditional tapioca ...
This is the right way to tap the traditional tapioca ...


இயற்கை முறையில் மரவள்ளி கிழங்கு சாகுபடி

தர்மபுரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் முக்கிய பயிர்களில், மரவள்ளி கிழங்கும் ஒன்று. மானாவரியில் சாகுபடி செய்யும் போது, விவசாயிகள் பாத்திகளில் மரவள்ளி கிழங்கு குச்சிகளை நேரடியாக நடவு செய்து வந்தனர்.

இறவை முறையில் நடவு செய்ய, நாற்றங்கால் அமைத்து நடுவு செய்து வந்தனர்.இது போன்று நடவு செய்யும் போது, அடிக்குச்சியில் இருந்து நடுக்குச்சி வரை நாற்றுகள் நட, விவசாயிகள் மரவள்ளி கிழங்கு குச்சிகளை பயன்படுத்தி வந்தனர்.இதனால், வைரஸ் நோய் மற்றும் வேர் அறுந்து பாதிக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து, தர்மபுரி மாவட்டம் உட்பட தமிழகத்தில் பெரும்பாலான மரவள்ளி கிழங்கு விவசாயிகள், கடந்த சில மாதங்களாக பசுமை குடில்களில் குழித்தட்டு நாற்றங்கால்களில் வளர்க்கப்படும் நாற்றுகளை பயன்படுத்தி வருகின்றனர்.

மரவள்ளி சாகுபடியில், தற்போது பசுமைகுடில்களில் குழித்தட்டுகளில் வளர்க்கப்படும் மரவள்ளி கிழங்கு நாற்றுக்களை வாங்கி பயன்படுத்த தொடங்கியுள்ளனர். குழித்தட்டு முறையில் நுனி குச்சிகள் நடவு செய்யப்படுவதால், வைரஸ் நோய் தாக்குதல் பெரும் அளவு குறைகிறது.

வேர்கள் எவ்வித பாதிப்பு இன்றி தரமான நாற்றுகளாக, குழித்தட்டில் இருந்து எடுத்து நேரடியாக நிலத்தில் நடவு செய்ய முடிகிறது.இதனால், செடிகள் நன்கு வளர்கிறது. நிலத்தில் ஒரு பகுதியில் கருகும் பயிர்களுக்கு உடனடியாக பசுமை குடிகளில் இருந்து தரமான நாற்றுகளை மீண்டும் பெற்று நடவு செய்ய முடியும்.

இதனால், விவசாயிகளுக்கு அளுவடையின் போது மகசூல் பாதிக்கப்படுவது தடுக்கப்படுகிறது. குழித்தட்டு நாற்றுக்கள் தரமானதவும், உரிய வளர்ச்சியுடன் கிடைப்பதால், விவசாயிகளுக்கு மகசூல் அதிகளவில் கிடைக்கிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios