பஞ்சகாவ்யாவை தெளிக்க இதுதான் சரியான முறை... இந்த அளவில் தெளித்தால் பயிர்கள் செழிக்கும்....
பஞ்சகாவ்யா தெளிக்கும் முறை
கரைசல் அதிகம் மற்றும் குறைந்த அளவு செறிவைக் காட்டிலும் 3% கரைசல் மிகவும் பயன்பாடு உள்ளது.
ஒவ்வொரு 100 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் பஞ்சகாவ்யாவை சேர்த்துப் பயன்படுத்தினால் அனைத்து பயிர்களுக்கும் சிறந்தது.
10 லிட்டர் கொள்ளளவு உள்ள மின் தெளிப்பிக்கு 300 மி.லி/நொடி அளவு தேவைப்படும்.
மின் தெளிப்பானில் தெளிக்கும் போது வண்டல்கள் கீழே தங்கிவிடும். கைகளால் இயக்கப்படும் தெளிப்பானில் பெரிய துளைமுனை உள்ள தெளிப்பானை பயன்படுத்தவும்.
பாய்வு முறை
பஞ்சகாவ்யா கரைசலை நீர்ப் பாசன முறையில் 50 லி/ஹெக்டர் என்ற அளவில் கலந்து சொட்டுப்பாசனம் அல்லது பாய்வுப் பாசன முறையில் இதனை பாய்ச்சவும்.
விதை நாற்று நேர்த்தி
நடவு செய்வதற்கு முன்பு விதைகளை முக்கி வைக்க அல்லது நாற்றுகளை அமுக்கி வைக்க 3% பஞ்சகாவ்யா கரைசல் பயன்படுத்தப்படுகின்றது.
20 நிமிடங்கள் முக்கி வைத்தால் போதும், மஞ்சள், பூண்டு மற்றும் கரும்பு வேர்த்துண்டுகளை நடவு செய்வதற்கு முன் 30 நிமிடங்கள் இந்தக் கரைசலில் முக்கி வைக்க வேண்டும்.
விதை சேமிப்பு
விதைகள் உலர்வதற்கு முன்பும், சேமித்து வைப்பதற்கு முன்பும் 3% பஞ்சகாவ்யா கரைசலில் முக்கி வைக்கவும்.
1. முன் பூர்க்கும் பருவம் 15 நாட்களுக்கு ஒரு முறை, பயிரின் கால இடைவெளி பொருத்து 2 தெளிப்பு தெளிக்கவும்
2. பூக்கும் மற்றும் இரு புறமும் வெடிகனி பருவம் 10 நாட்களுக்கு 2 தெளிப்பு
3. பழம்/இருபுறமும் பழங்கள் வெடித்து முதிர்ச்சி அடையும் பருவம் பழங்கள் வெடித்து முதிர்ச்சி அமையும் போது ஒரு முறை தெளிக்கவும்