Asianet News TamilAsianet News Tamil

ஆலமரம் எப்போதும் சிறப்பு வாய்ந்ததாக இருக்க இதுதான் காரணம்...

This is the reason why the banyan tree is always special.
This is the reason why the banyan tree is always special.
Author
First Published May 10, 2018, 2:02 PM IST


ஆலமரம்

ஆலமரம் என்பது மிகவும் சிறப்புமிக்க மரம். ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி என்று வாழ்த்துவார்கள். தழைத்தோங்கி நிற்பதற்கு ஆலமரத்தைத்தான் குறிப்பிடுவார்கள். அதற்கு நிகராக எதையும் சொல்ல முடியாது. 

அடுத்து, ஆலமரத்தின் கீழ் எதுவும் முளைக்காது என்று பெரியவர்கள் சொல்வார்கள். அப்படியே முளைத்தாலும் அது பூக்காது, காய்க்காது, கனியாது என்பார்கள். ஏனென்றால், ஆலமரம் இருக்கும் இடத்தில் மற்ற செடிகள் ஓங்கி உயரவோ, வளரவோ முடியாது. அதுபோன்ற சக்தி கொண்டது ஆலமரம்.

அடுத்ததாக, ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்று சொல்வார்கள். கருவேல மரத்தின் குச்சி, ஆலமரத்தின் குச்சி ஆகிய இரண்டாலும் பல் துலக்கும் போது பல்லினுடைய ஈறுகள் வலுவடைகிறது. 

குறிப்பாக ஆலங்குச்சியில் ஒருவிதமான துவர்ப்புத் தன்மையைக் கொடுக்கும். மேலும், அதில் கொஞ்சம் பாலும் இருக்கும். இந்தப் பால் தேய்க்கத் தேய்க்க பல்லுக்கு இயற்கையான உரத்தைக் கொடுத்து சக்தியைக் கொடுக்கிறது. அதனால்தான் அதுபோன்ற பழமொழி சொன்னது.

தவிர, ஆலமரங்கள் சில கோயில்களுக்கு தல விருட்சங்களாகவும் இருக்கிறது. அடுத்து, ஆலமரத்தின் கீழ் உட்கார்ந்து தவம் செய்தால் சிலதெல்லாம் சித்தியாகும். அரச மரத்தை போதி மரம் என்று சொல்கிறோம். ஆனால், இலங்கை அனுராதாபுரத்தில் உள்ள போதி மரம் ஆலமரம்தான்.

மேலும், அதன் இலைகள், பட்டைகள் இதற்கெல்லாம் நிறைய மருத்துவ குணம் உண்டு. இலைக் கசாயம் சளித் தொந்தரவை நீக்கவல்லது. பட்டைகள் உள்ளுக்குள் இருக்கும் இரணத்தை ஆற்றக்கூடியது. வாய்ப்புண் போன்றவற்றை ஆலமரத்தில் இருந்து வடியும் பால் குணமாக்கும். ஆலம் பட்டைகள் ஆணின் உயிரணுக்கள், விந்தணுக்களை வலுப்படுத்தக்கூடிய சக்தி உண்டு. ஆலம் பழத்தை பதப்படுத்தி உண்பவர்களும் உண்டு.

சில எல்லைத் தெய்வங்களுக்கு ஆலம் பழம் நெய்வேத்தியமாக இருக்கிறது. தவிர, ஆலமரங்கள் இருந்த இடத்தில் முனிவர்கள், சித்தர்கள் அமர்ந்து அந்தக் காலத்தில் தவம் செய்திருக்கிறார்கள். பொதுவாக குளிர்ச்சியான இடத்தைத் தேடி அவர்கள் உட்காருவார்கள். சாதகமான சக்தியையும் தரக்கூடியது ஆலமரம்.

மேலும், ஆலமரத்தின் விழுதுகளுக்கென்று ஒரு தனி சக்தி உண்டு. அந்த விழுதுகள் படர்ந்திருப்பதைப் பார்த்தாலே ஒரு சாத்வீகத் தன்மை உண்டாகும். அதனால், ஆலமரம் என்பது ஒரு சக்தி வாய்ந்த மரம். அதனை வைத்து பராமரித்தால் ஆக்சிஜன், ஓசோன் அனைத்துமே முழுமையாகக் கிடைக்கும்.இந்தியாவில் ஆலமரம் இல்லாத கிராமமே பார்க்க இயலாது .அதுவும் ஒவ்வரு ஆலமரமும் மிகப் பழமையாக பாரம்பரிய தொடர்ச்சியும் கொண்டவை.

பெரிய மரமாக அடர்ந்து படர்ந்து இருப்பதினால் மட்டுமே ஆலமரத்தடியில் ஊர்க்கூட்டம் நடத்தபடுவதில்லை , மாறாக ஆலமரத்தடியில் சென்று அமர்ந்தாலே அமைதி வந்துவிடும் .தியானம் கூடிவிடும் .இது அனுபவ பூர்வமான உண்மை.

இம்மரத்தின் அடியில் தவம் இருப்பவர்களுக்கு ஞானம் பெற்றுத் தருவதில் ஆல மரத்துக்குத் தனி மகிமை உண்டு. இந்த மரத்தடியில் ஊர்கூட்டம் நடத்தினால் மக்கள் அமைதியாக உணர்ச்சிவசப்படாது இருப்பார் என்று நம் முனோர் அறிந்திருந்தனர் .

ஆல மரத்துப் பால், இலைகள், பட்டை, கனிகள், விதைகள், மொட்டுகள், வேர், விழுதுகள் யாவும் மருத்துவப் பொருட்களாகப் பயன்படுகின்றன.

Follow Us:
Download App:
  • android
  • ios