This is the reason why everyone wants to grow oyster mushroom ...
சிப்பி காளான்
காளானில் வைட்டமின் பீ அதிகமாக இருப்பதால் இதயம் சம்பந்தமான நோய்களை குணப்படுத்துகிறது.
போலிக் ஆசிட் அதில் இருப்பதால் ரத்தசோகை நோய்க்கு நல்லது.
சிறந்த கண்பார்வைக்கும் எலும்புகளின் வளர்ச்சிக்கும் பற்களின் உறுதிக்கும் தேவையான தாமிர, இரும்பு சத்துகளுடன் கூடிய கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற தாதுக்களும் காளானில் உள்ளன.
இவ்வாறு பல நற்குணங்களை கொண்டதால்தான் சிப்பி காளானை அனைவரும் வளர்க்க முன்வருகின்றனர்.
வைக்கோல் தயாரிப்பு:
காளான் வளர்ப்பதற்கு நெல் வைக்கோலைக் கொண்டு உருளை படுக்கைகள் தயாரிக்க வேண்டும்.
புதிய நெல் வைக்கோலை 5 செ.மீ. நீளத்திற்கு வெட்டி, 4-5 மணி வரை நீரில் ஊறவைக்க வேண்டும்.
பிறகு வைக்கோலை நன்கு கொதிக்கும் நீரில் ஒரு மணிநேரம் வேகவிட வேண்டும்.
பின் வைக்கோலை அகற்றி உலர்த்திக் கொள்ள வேண்டும்.
காளான் படுக்கை தயாரித்தல்:
2க்கு 1 அடி அளவுக்கு 80 காஜ் கனமுள்ள பாலிதீன் பைகளில் அடுக்கு முறையில் காளான் விதையிடப்பட்ட படுக்கைகள் தயாரிக்கப் படுகிறது.
பாலிதீன் பையின் அடிப்பகுதியை சணலால் கட்டி அதை உள்பக்கமாக திருப்பிவிட வேண்டும்.
பையின் அடிப்பகுதியில் 5 செ.மீ. உயரத்திற்கு வைக்கோல் துண்டுகளை பரப்பி அதன் மேல் 30 கிராம் காளான் வித்தை தூவ வேண்டும்.
இதே போல் 4 அடுக்குகள் தயாரித்து மேல்பகுதியில் 5 எச்.மீ. வைக்கோல் பரப்பி, பையின் வாய்பகுதியை சணலால் இறுக்க கட்டவேண்டும்.
பாலிதீன் மையப்பகுதியில் பென்சில் அளவுள்ள 5-10 துளைகள் போடவேண்டும்.
இந்த காளாண் படுக்கையில் தான் சிப்பி காளாண்களை வளர்க்க முடியும்.
