கோழிகளைத் தாக்கும் மிகவும் ஆபத்தான இந்த தொற்று நோயை தடுக்க இதுதான் ஒரே வழி...

This is the only way to prevent the most dangerous infectious disease that attacks chicken.
This is the only way to prevent the most dangerous infectious disease that attacks chicken.


சிறு மூச்சுக்குழல் நோய்

நோயின் தன்மை

** கோழிகளைத் தாக்கும் முக்கியமான தொற்று நோய் சிறு மூச்சுக்குழல் நோயாகும்.இந்நோய் முட்டை உற்பத்தியாகும் குழாயினையும், சில வைரஸ்கள் கோழிகளின் சிறுநீரகத்தையும் பாதிக்கும்.

** இந்நோய் கோழிக்குஞ்சுகளின் எந்த வயதிலும் ஏற்படும். ஆனால் ஆறு வார வயதிற்கு குறைவாக உள்ள கோழிக்குஞ்சுகள் இந்நோயினால் அதிகம் பாதிக்கப்படுகின்றன.

** இந்நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகளில் முட்டை உற்பத்தியும், முட்டையின் தரமும் முட்டைக்கோழிகளில் பாதிக்கப்படுவதுடன், இறைச்சிக்கோழிகளில் உற்பத்தித்திறனும் பாதிக்கப்படுகிறது.

** மைக்கோபிளாஸ்மா மற்றும் ஈ.கோலை போன்ற நுண்கிருமிகளும் சிறு மூச்சுக்குழல் நோயுடன் சேர்ந்து நோயின் தாக்குதலை அதிகரித்து நோய் தாக்கும் காலத்தை நீட்டிக்கும்.

நோய்க்கான காரணங்கள்

** கரோனா வைரஸ் இந்நோயினை ஏற்படுத்தும் ஒரு முக்கியமான காரணியாகும்.

** கரோனா வைரஸ் பொதுவான ரசாயனங்கள் மற்றும் இயற்பியல் காரணிகளால் எளிதில் கொல்லப்பட்டு விடும்.

** காற்று மூலம், நோய்க்கிருமியினால் அசுத்தமடைந்த தீவனம், தண்ணீர், பாதிக்கப்பட்ட கோழிகளுடன் ஏற்படும் நேரடித் தொடர்பு, நோய்க்கிருமியால் அசுத்தமடைந்த உபகரணங்கள், துணிகள் மற்றும் மனிதர்களால் இந்நோய் எளிதாகப் பரவுகிறது.

** நோய்க்கிருமிகளால் பாதிக்கப்பட்ட கோழிகளின் சளி, எச்சம், முட்டை ஓடுகளில் வைரஸ் இருக்கும்.

** குளிர்காலத்தில் இந்த வைரஸ் சுற்றுப்புறத்தில் சில நாட்களுக்கு உயிரோடு இருக்கும். இதனால் குளிர்காலத்தில் நோயின் தாக்குதல் அதிகமாக இருக்கும். ஆனாலும் எந்த ஒரு பருவ காலத்திலும் இந்நோய் கோழிகளைத் தாக்கும்.

** கோழிப்பண்ணையில் கோழிகளுக்கிடையே எளிதில் இந்நோய் பரவும்.

** கோழிகளுக்கிடையே நேரடித் தொடர்பால் இந்நோய் எளிதில் பரவும்.

** முட்டைகள் வழியாக இந்நோய் எளிதில் பரவும்.

** நோய்க்கிருமியால் அசுத்தமடைந்த உயிரற்ற பொருட்கள் மூலமும் இந்நோய் பரவும்.

நோய் அறிகுறிகள்

** ஆறு வார வயதிற்குக் குறைவாக உள்ள கோழிக்குஞ்சுகளில் தும்மல், இருமல், மூச்சு விட சிரமப்படுதல், கண்கள் மற்றும் மூக்கிலிருந்து நீர் வடிதல் போன்ற அறிகுறிகள் காணப்படும்.

** கொட்டகையினைச் சூடாக்கும் வெப்ப ஆதாரத்தின் கீழ் கோழிக்குஞ்சுகள் அடைந்து காணப்படும்.

** முகம் வீங்கி, முகத்திலுள்ள சைனஸ்களும் வீங்கிக் காணப்படுதல்

** இந்நோயினால் பாதிக்கப்பட்ட கோழிக்குஞ்சுகளில் 25-60% இறப்பு ஏற்படுவதுடன்,நோய் 1-2 வாரம் வரை நீடிக்கும்.

** கோழிக்கொட்டகையிலிருந்து தொலைவிலேயே இந்நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகள் மூச்சுவிடும் போது ஏற்படும் சத்தம் கேட்கும்.

** வளரும் மற்றும் வயது முதிர்ந்த கோழிகளில், இந்நோய் அறிகுறிகளின் தாக்கம் குறைவாகக் காணப்படும். இக்கோழிகளில் சுவாச மண்டல அறிகுறிகள் குறைந்தும், இறப்பும் குறைவாகவும் காணப்படும்.

** முட்டையிடும் கோழிகள் இந்நோயினால் பாதிக்கப்படும் போது அவற்றின் முட்டை உற்பத்தி 5-50% வரை திடீரெனக் குறைந்து விடும்.

** முட்டையிடும் கோழிகளில் முட்டை உருவாகும் குழாய் இந்நோயினால் பாதிக்கப்படுவது பொதுவாக நடக்கும்.

** முட்டையில் மாறுபாடுகள் காணப்படுதல் (ஒழுங்கற்ற வடிவமுடைய முட்டைகள், முட்டை ஓடு மெல்லியதாகக் காணப்படுதல், முட்டை ஓடு சொரசொரப்பாகக் காணப்படுதல், தோல் முட்டைகள் தோன்றுதல்).

** முட்டையின் தரம் குறைந்து, அதிலுள்ள அல்புமின் தண்ணீர் போலாக மாறிவிடும்.

** சிறுநீரகம் பாதிக்கப்படுவதால், கோழிகள் சோர்ந்து, இறகுகள் துருத்திக்கொண்டு, எச்சம் தண்ணீர் போன்று காணப்படுதல். மேலும் கோழிகள் தண்ணீர் அதிகமாகக் குடிக்கும். மேலும் இறப்பு விகிதம் 0.5-1% (ஒரு வாரத்திற்கு) சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படும்.
 
நோய்த்  தடுப்பு முறைகள்

** முறையான சுகாதார மேலாண்மை முறைகள் மற்றும் தடுப்பூசி அளிப்பதால் இந்நோயினை கட்டுப்படுத்தலாம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios