Asianet News TamilAsianet News Tamil

பண்ணைக்கான பசு மாடுகள் மற்றும் எருமை மாடுகளை தேர்வு செய்யும் முறை இதுதான்...

This is the method of selection of cow cows and buffalo cows for the farm ...
This is the method of selection of cow cows and buffalo cows for the farm ...
Author
First Published Jan 4, 2018, 1:32 PM IST


பண்ணைக்கான பசுமாடுகள் மற்றும் எருமைகளை தேர்வு செய்யும் முறை

பசுமாடுகள்

** ஒரு லிட்டர் பாலிற்கு ரூ.1,200 – ரூ.1,500 என்ற விலையில் நல்ல தரமான மாடுகள் சந்தையில் கிடைக்கிறது. (நாளுக்கு 10 லிட்டர் பால் கொடுக்கக்கூடிய மாட்டின் விலை ரூ.12,000 – 15,000) நன்றாக பராமரிக்கும் பொழுது, ஒவ்வொரு 13-14 மாத இடைவெளியில், கன்று ஈனுகிறது. 

** கறவைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். நன்றாக பால் தரக் கூடிய கலப்பினங்கள் (ஹால்ஸ்டீன் மற்றும் ஜெர்சி கலப்பினங்கள்) இந்திய சூழலுக்கு ஏற்றவை ஆகும்.

** பசும்பாலில் 3-5.5% கொழுப்பு உள்ளது. இது எருமைப் பாலைவிட சற்று குறைவாக உள்ளது.

எருமை மாடுகள்

** மாட்டுப் பண்ணைக்கு ஏற்ற முர்ரா மற்றும் மேசனா போன்ற எருமை இனங்கள் உள்ளன.

** பசும்பாலைவிட எருமைப்பாலில் அதிக அளவில் கொழுப்பு சத்து இருப்பதால், இது வெண்ணை மற்றும் நெய்க்காக அதிகம் தேவைப்படுகிறது. இந்திய வீடுகளில அதிகம் அருந்தப்படும் டீ தயாரிப்பதற்கும் எருமைப் பால் விரும்பப்படுகிறது.

** எஞ்சிய பயிர் கழிவுகளைக் கொண்டு எருமையை வளர்க்கலாம். இதனால் செலவு குறைகிறது.

** எருமைகள் ஈனுவதற்கு தாமதமாகிறது. மேலும் கறவை கால இடைவெளி 16-18 மாதங்கள் ஆகிறது. காளைக் கன்றுகளுக்கு அதிக மதிப்பு இல்லை.

** எருமைக்கு குளிர்ச்சியான சூழல் தேவை.

Follow Us:
Download App:
  • android
  • ios