இயற்கை விவசாயம் முறையில் நீங்கள் கொஞ்சம்கூட எதிர்ப்பார்த்திராத இந்த விஷயம் நடக்கிறது...
இயற்கை விவசாயம் முறைகளில் கால்நடைகளின் கழிவுகள் குவியலாகக் குவிக்கப்பட்டு,மக்கிய தொழுவுரம் தயாரிக்கப்பட்டு, மண்ணில் இடப்பட்டு, மண்ணின் வளம் மக்குப்பொருட்களின் மூலம் பாதுகாக்கப்படுகிறது. இதனுடன் தாவரக்கழிவுகளும் சேர்க்கப்பட்டு மதிப்புக் கூட்டப்படுகிறது.
இதன் மூலம் நேரிடையாக மண்ணில் இடுவதன் மூலம் (பண்ணைக்கழிவுகள், கால்நடைக் கழிவுகள்) வீணாகக் கூடிய சத்துக்கள் மக்குப்பொருட்களுக்குள் ஏற்றப்பட்டு தாவரங்கள் உடனடியாக ஏற்றுக்கொள்ளும் அளவில் மாற்றப்படுகிறது.
இதனுடன் பல்வகைப்பட்ட கல்தூள்கள், ஆழமாகத்தோண்டி எடுக்கப்படும் மண், பசுந்தழை,உரப்பயிர்கள், கால்நçக் கழிவுகளாக இறைச்சிக் கழிவுகள், இரத்தம், தோல் கழிவுகள்,எலும்புகள், குளம்புகள், நீர்வாழ் உயிரனங்களின் கழிவுகள், கடல்பாசி வகைகள் போன்றவற்றையும்சேர்த்தால் மேலும் அதிகமாக நுண்ணுயிர்சத்துக்களைப் பெற முடியும்.
மேலும் பயிர்ச்சுழற்சி முறைகள், ஒரே நிலத்தில் பலவகைபட்ட பயிர்வகைகளைப்பயிர்செய்தல் மண்ணில் சத்துக் குறைபாடுகளைத் தவிர்க்க முடியும்.மணிச்சத்துக் குறைபாட்டிற்கு’ ராக் பாஸ்பேட்’ உபயோகித்து மக்கு உரம் தயாரிக்கலாம்.
குதிரைமசால் செடிகளில் மணிச்சத்து அதிகம் உள்ளதால் அதை நிலத்தில் விதைத்து வளரச் செய்து உழுது மடக்கி விட்டு மண்ணில் கலப்பதன் மூலமும் நிலைபெறச் செய்யலாம். சாம்பல் சத்திற்கு நேரிடையாகச் சாம்பல் மக்கு உரத்தயாரிப்பில் இட்டு உரம் தயாரிக்கலாம்.
கோ கோ படி ஓடுகள். தென்னை ஓலை மட்டைகள் வாழைத்தண்டு, மஞ்சள்ப் பயிரின் சறுகுகள் இவற்றையும் உபயோகிக்கலாம். நிழலாக உள்ள இடத்தில் காம்ஃபிரே செடிகளை வளர்த்து மடக்கி உழுவதன் மூலம் உரம் தயாரிப்பதை அதிகரிக்கலாம்.
சுண்ணாம்புச் சத்து நேரடியாக நீர்த்த சுண்ணாம்புத் தூளை நமக்கு உரத்தயாரிப்பில் இடுவதன் மூலம் சீர்செய்யப்படுகிறது.இவற்றின் மூலம் அவர்கள் அறிந்துகொண்டது இயற்கை முறை விவசாயம் என்பது இயற்கையான இடுபொருட்கள் மட்டுமின்றி இதற்கெனத் தனியாக உள்ள வழிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும்.
இதன்மூலம் இந்தப் பிரபஞ்சத்தில் வெளிப்படும் சக்திகளையும் உதவியாகக்கொண்டு ஆரோக்கியமான உணவுகளை மனிதர்கள் மட்டுமின்றி அனத்து ஜீவராசிகளும் பெறமுடியும் என்பதாகும்