Asianet News TamilAsianet News Tamil

வாழை மரத்தை ஒட்டு மொத்தமாக காலி செய்துவிடும் மஞ்சள் நோய்…

This disease will kill banana and make loss
This disease will kill banana and make loss
Author
First Published Jul 28, 2017, 12:38 PM IST


 

வாழையில் மஞ்சள் நோய் வந்தால் வாழை மரத்தையே ஒட்டு மொத்தமாக காலி செய்து நஷ்டம் ஏற்படுத்திவிடும்.

மஞ்சள் நோய் அறிகுறிகள்

ஆரம்பத்தில் அடி இலையின் ஓரங்கள் மஞ்சளாக காணப்படும்.

நாளடைவில் இந்த மஞ்சள் நிறம் இலையின் மையப்பகுதி அல்லது நடுநரம்புக்குப் பரவி, கடைசியில் இலை முழுவதும் மஞ்சள் நிறமாக மாறுகிறது.

பின்னர், இந்த மஞ்சள் நிறமானது அடி இலையிலிருந்து மேல் இலைகளுக்கும் பரவி வாழை மரத்திலுள்ள அனைத்து இலைகளும் மஞ்சள் நிறமாக மாறும்.

பாதிக்கப்பட்ட மரத்தின் அடி இலைகள், இலைக்காம்பு பகுதிகள் ஒடிந்து தண்டைச் சுற்றி தொங்கும்.

தண்டின் நீளவாக்கில் அடியிலிருந்து வெடிப்புகள் காணப்படும். சில நேரங்களில் மரம் இறப்பதற்கு முன்னால் நிறைய பக்க கன்றுகள் தோன்றும்.பொதுவாக நோய் பாதிக்கப்பட்ட வாழை மரத்தில் தார்கள் வருவதில்லை.

அப்படியே தார் வந்தாலும் காய்கள் மிகவும் சிறுத்தும், குறைந்த எண்ணிக்கையிலும் காணப்படும். இக்காய்கள் ஒரே சீராக பழுப்பதில்லை, சதைப் பகுதியும் ருசி இல்லாமல் அமிலச் சுவையாக இருக்கும்.

அடிக்கிழங்கை குறுக்காக வெட்டிப் பார்த்தால் அதில் நீர் மற்றும் சத்துக்களை கடத்தக்கூடிய சாற்றுக் குழாய்த் தொகுப்பு, மஞ்சள் கறுப்பு போன்ற நிறங்களில் காணப்படும்.

நீண்ட நாள்களுக்கு பிறகு இந்த நோய் பாதிக்கப்பட்ட மரம் அழுகி, வெட்டப்பட்ட தண்டுப் பகுதியிலிருந்து அழுகிய மீன் போன்ற துர்நாற்றம் வீசும்

இந்த மஞ்சள் நோய் பியூரிசம் என்று அழைக்கப்படும் ஒருவித பூஞ்சாணமானது ஏற்படுத்துகிறது. இந்த பூஞ்சாணம் பலவித வித்துக்களை உற்பத்தி செய்து அவை மண்ணில் சுமார் 30 ஆண்டுகள் வாழக்கூடியது

கட்டுப்படுத்தும் முறைகள்:

வாழையைத் தொடர்ந்து சாகுபடி செய்யாமல், நெல், மரவள்ளி போன்ற பயிர்களை ஓரிரண்டு ஆண்டுகள் சாகுபடி செய்தபின் வாழை நடவு செய்யலாம்.

எங்கெல்லாம் இந்த நோயின் தாக்குதல் இருக்கிறதோ, அந்தநிலங்களில் மாற்று ரகங்களான பூவன், பொபஸ்டா, செவ்வாழை ஆகியவற்றை சாகுபடி செய்யலாம்.நோய் பாதிக்கப்பட்ட கிழங்கு அல்லது கன்றுகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடங்களுக்கு கொண்டு சென்று நடவு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

வாடல்நோய் தாக்காத வாழைத் தோட்டங்களில் தார் வெட்டும் முன்பே சென்று பார்த்து கன்றுகளைத் தேர்வு செய்ய வேண்டும். கன்றுகளை வாழைத் தோட்டத்திலிருந்து எடுத்தபின் கன்றுகளின் கிழங்குகளின் மேல்தோல் மற்றும் வேர்களை நீக்கி பின் அக்கிழங்கை 0.2 சதவிகிதம் கார்பெண்டாசிம் (ஒரு லிட்டர் நீரில் 2 கிராம்) மற்றும் மோனோகுரோட்டாபாஸ் (ஒரு லிட்டர் நீரில் 14 மில்லி) மருந்துக் கலவையில் 30 நிமிடம் மூழ்க வைத்து பின் நிழலில் உலர வைத்து நடவு செய்ய வேண்டும்.

நடவு செய்த உடன் கிழங்கை சுற்றி 20 கிராம் டிரைகோடெர்மா விரிடி மற்றும் 20 கிராம் சூடோமோனாஸ் ப்ளூரெசென்ஸ் ஆகிய எதிர் உயிர்க் கொல்லிகளை அரை கிலோ மண்புழு உரத்துடன் கலந்து இட்டு நீர் பாய்ச்ச வேண்டும். இந்த முறையை கன்று நட்ட 2, 4 மற்றும் 6-வது மாதங்களில் மீண்டும் செய்ய வேண்டும்.

ஓரிரண்டு வாழைகளில் நோயின் அறிகுறி தென்பட்டதும் அனைத்து வாழை மரத்துக்கும் தலா 2 லிட்டர் மருந்து கலவை வீதம் மரத்தைச் சுற்றி ஊற்றி பியூசேரியம் வாடல் நோயைக் கட்டுப்படுத்தலாம்

Follow Us:
Download App:
  • android
  • ios