வெள்ளாடுகளை வளர்க்க நினைப்போருக்கு இந்த இரண்டு முறைகள் பெரிதும் உதவும்…

These two methods greatly help those who want to develop goats ...
These two methods greatly help those who want to develop goats ...


1.. சுழற்சிமுறை மேய்ச்சல்

** தற்காலிகத் தடுப்புகள் மூலம் பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட மேய்ச்சல் நிலங்களில் இம்முறையை பின்பற்றலாம்.

** இம்முறையில் ஆடுகள் படிப்படியாக ஒரு பிரிவிலிருந்து மற்றொரு பிரிவிற்கு மாற்றப்படும். இவ்வாறு முழு மேய்ச்சல் நிலத்தில், மேய்ச்சல் செய்தால், மேய்ச்சல் நிலத்தின் முதல் பகுதியில் புற்கள் வளர்ந்து, இரண்டாம் மேய்ச்சலுக்குத் தயாராகிவிடும்.

** இதனால் ஒட்டுண்ணிகளின் தாக்கம் குறையும் அல்லது கட்டுக்குள் இருக்கும்.

** மேலும் தரமான புற்கள் வருடம் முழுவதும் ஆடுகளுக்கு மேய்ச்சல் மூலம் கிடைக்க ஏதுவாகும்.

** இந்த முறையில் முதலில் குட்டிகளை மேயவிட்டு, பின்னர் பெரிய ஆடுகளை மேயவிட்டால் குட்டிகள் மேய்ந்து மீதமுள்ள அனைத்து புற்களையும் பெரிய ஆடுகள் தின்றுவிடும்.

2.. மேய்ச்சல் முறை

** வெள்ளாடுகளை திறந்த வெளி மேய்ச்சல் நிலங்களில் மேயவிட்டு வளர்க்கும் முறையே மேய்ச்சல் முறையாகும்.

** இம்முறையில் தீவனச் செலவு குறைவு

** இம்முறையில் எல்லா வகைப்புற்களையும் நல்ல முறையில் உபயோகிப்பது அரிது. எனவே நாம் சுழற்சி முறை மேய்ச்சலைப் பின்பற்றலாம். .

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios