These methods of controlling the weeds and the near weeds can be used ...
கோரை, அருகம்புல் ஆகிய களைகளை கட்டுப்படுத்தும் முறைகள்
உலகெங்கும் உள்ள 18 மோசமான களைகளில் பயிருக்குச் சேதம் ஏற்படுத்துவதில் கோரை முதல் இடத்தையும் அருகம்புல் இரண்டாவது இடத்தையும் வகிக்கின்றன.
இக்களைகள் அதிகம் உள்ள நிலங்களில் பயிர் இல்லாத காலத்தில் கிளை போசேட் என்ற களைக்கொல்லியை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 முதல் 10 மி.லி வீதம் கலந்து களைகளின் மீது படும்படி தெளிக்க வேண்டும்.
இக்கரைசலில் ஒரு லிட்டருக்கு பத்து கிராம் வீதம் அம்மோனியம் சல்பேட்டையும் ஒரு மி.லி டீபாலையும் கலந்து கொள்ளுதல் நலம்.
இப்புற்கள் இரண்டு அல்லது மூன்று இலைப்பருவத்தில் இருக்கும்போது தெளித்தால் நன்கு கட்டுப்படும். களைக்கொல்லி இட்ட 15 நாட்களில் புற்கள் காய்ந்து விடும்.
பின்னர் 15 நாட்கள் கழித்து நிலத்தைக் கோடை உழவு செய்ய வேண்டும்.
மீண்டும் களைகள் முளைப்பது தெரிந்தால் இதே களைக்கொல்லியை மீண்டும் ஒரு முறை தெளிக்க வேண்டும்.
களைக்கொல்லி அடித்து ஒரு மாதத்திற்குப் பின்தான் பயிர் சாகுபடி செய்ய வேண்டும்.
