சந்தைக்கு செல்லும் ஆட்டுக் குட்டிகளுக்கு இந்த தீவனங்கள் தான் சரி…
** தீவனங்களின் வகைகள் மற்றும் தீவனமளிப்பு முறைகள் ஆகியன பொருளாதார மற்றும் சுற்றுச் சூழல் மற்றும் தீவன மூலப் பொருட்களின் கிடைக்கக் கூடியத் தன்மையைப் பொருத்து வேறுபடும்.
** வளர்ந்து வரும் நாடுகளில், மேய்ச்சல் நிலங்கள், மேய்ச்சலுக்கல்லாத நிலங்கள் மற்றும் தானியங்களின் அறுவடையில் எஞ்சியவைகளை சிறந்த முறையில், முடிந்த வரை பயன்படுத்தி, சத்துக்குறைபாடு உள்ள போது நல்ல தரமான பசுந்தீவனம், உலர்புல் அல்லது அடர் தீவனத்தினால் சினைக்கட்டுவதையே கொள்கையாகக் கொண்டுள்ளனர்.
** சராசரியாக ஒரு குட்டிக்கு 225லிருந்து 450 கிராம் அடர் தீவனக் கலவையை மேய்ச்சலைப் பொருத்துக் கொடுக்கலாம்.
** மேய்ச்சல் அதிகமாக இருப்பின் 225 கிராம் அடர் தீவனமே போதுமானது.
** மேய்ச்சல் நிலம் ஏற்கனவே நிறைய மேய்ச்சலுக்குட்பட்டிருந்தால், 450 கிராம் அடர் தீவனத்துடன் அரை கிலோவிலிருந்து 2 கிலோ கிராம் வரை நல்ல பசுந்தீவத்தைச் சேர்த்துக் கொள்ளவேண்டும்