Asianet News TamilAsianet News Tamil

ஆடுகளுக்கு எப்படிப்பட்ட நோய்கள் வந்தாலும் இந்த மூலிகை வைத்தியத்தின் மூலம் குணமாக்கலாம்...

These herbal remedies can be cured by any kind of diseases.
These herbal remedies can be cured by any kind of diseases.
Author
First Published Feb 21, 2018, 3:15 PM IST




** ஆடுகளுக்குச் சரியான நேரத்துல குடல்புழு நீக்கலனா, மெலிஞ்சு போயிடும். கால்படி அளவு சூபாபுல் (சவண்டல்) விதையை, 24 மணி நேரம் தண்ணியில ஊற வெச்சு, அதுல இருந்து 50 மில்லி தண்ணிய எடுத்து ஆட்டுக்குக் கொடுத்தா போதும். குடல்புழு வெளிய வந்துடும்.

** வேப்பிலை, மஞ்சள், துளசி இது மூணையும் சம அளவு எடுத்து அரைச்சி,நெல்லிக்காய் அளவு கொடுத்தா வாய்ப்புண் ஆறிடும்.

** காய்ச்சல் வந்த ஆடுகளுக்கு, 3 சின்ன வெங்காயம், 5 மிளகு, ஒரு வெற்றிலையை ஒண்ணா வெச்சு கொடுத்தா சரியாகிடும்.

** 50 மில்லி நெய்யை மூணு நாளைக்குக் கொடுத்துட்டு வந்தா தொண்டை அடைப்பான் சரியாகிடும்.

** கொழிஞ்சியை அரைச்சி ஒரு கொய்யாப்பழ அளவுக்குக் கொடுத்தா விஷக்கடி சரியாகிடும்.

** ஆடுகளுக்கு வர்ற பெரிய பிரச்னை கழிச்சல். இதுக்கு ரொம்ப கஷ்டப்பட வேணாம். 5 கத்திரிக்காயைச் சுட்டு தின்னக் கொடுத்தா போதும். கழிசல் காணாம போயிடும்.

** கண்டங்கத்திரிப் பழத்தை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, வெள்ளாட்டுக் கோமியத்துல24 மணி நேரம் ஊறவெச்சு, சாறு எடுத்து, மூணு சொட்டு மூக்குல விட்டா மூக்கடைப்பு, சளி எல்லாம் சரியாகிடும்.

** சீதாப்பழ மர இலையை ஆடுக மேல தேய்ச்சி விட்டா பேன் எல்லாம் ஓடிடும்.

** ஜீரண கோளாறு வந்தா, 300 மில்லி தேங்காய் எண்ணெய் கொடுத்தா சரியாகிடும். நல்லெண்ணெயும், மஞ்சளும் கலந்து தடவுனா கழலை போயிடும். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios