வான்கோழிகளுக்கு ஏற்படும் இந்த மாதிரியான நோய்களை தீர்க்க இதுதான் வழிகள்...
1.. நியுகேசில் நோயின் அறிகுறிகள்
இளைப்பு வாங்குதல், மூச்சு விட சிரமப்படுதல், கழுத்தை திருகிக்கொள்ளுதல்,வலிப்பு மற்றும் தோல் போன்ற ஓடுகளையுடைய முட்டையிடுதல்.
நோய்த்தடுப்பு முறைகள்
தடுப்பூசி போடுதல்.
2.. பாரா டைபாய்டு நோயின் அறிகுறிகள்
வான்கோழிக்குஞ்சுகளில் கழிச்சல்.
நோய்த்தடுப்பு முறைகள்
நோய்த் தடுப்பு மற்றும் பண்ணைச்சுகாதாரம்.
3.. வான்கோழி கொரைஸா நோயின் அறிகுறிகள்
மூச்சு விடும் போது சத்தம் உண்டாதல், மூக்குத்துவாரங்களிலிருந்துஅதிகமான அளவு சளி வடிதல்.
நோய்த்தடுப்பு முறைகள்
தடுப்பூசி போடுதல்.
4.. காக்ஸிடியோஸிஸ் நோயின் அறிகுறிகள்
இரத்தக்கழிச்சல் மற்றும் எடைகுறைதல்.
நோய்த்தடுப்பு முறைகள்
முறையான பண்ணை சுகாதாரம் மற்றும் ஆழ்கூள மேலாண்மை.
5.. வான்கோழி வெனிரியல் நோயின் அறிகுறிகள்
முட்டைகள் கருவுறும் மற்றும் குஞ்சு பொரிக்கும் திறன் குறைதல்.
நோய்த்தடுப்பு முறைகள்
கடுமையான பண்ணை சுகாதாரம்.