கூன் வண்டிடம் இருந்து வாழையை காப்பாற்ற இதுதான் வழிகள்...
கூன் வண்டிடம் இருந்து வாழையை காப்பாற்ற
வாழை மரப்பொறி
ஒரு அடி நீளமுள்ள வாழைத் தண்டினை இரண்டாகப் பிளந்து அவற்றில் உயிர் பூச்சிக்கொல்லியைத் தூவி ஏக்கருக்கு 40 என்ற விகிதத்தில் வாழைத் தோட்டங்களில் வைப்பதால் கூன் வண்டுகளைக் கவர்ந்து அளிக்கலாம்.
தேர்வு செய்யப்பட்டு பிளக்கப்பட்ட தண்டுக்கு 20 கிராம் பெவேரியா பேசியானா என்னும் உயிரியல் பூச்சிக்கொல்லியை வெட்டப்பட்ட பகுதியில் தூவி, வெட்டப்பட்ட அல்லது பிளக்கப்பட்ட பகுதி தரைப்பகுதியில் இருக்குமாறு தோட்டங்களில் ஆங்காங்கே வைக்க வேண்டும்.
தண்டுப் பகுதியில் உள்ள ஈரப்பதத்தின் மூலமாக உயிரி பூச்சிக்கொல்லிகள் பல்கிப் பெருகுவதுடன் அதிலிருந்து வெளிப்படும் வாசம், தாய் வண்டுகளைக் கவர்ந்து இழுக்கின்றன.
இவ்வாறு கவர்ந்திழுக்கப்பட்ட வண்டுகள், தண்டுப் பொறியை உண்பதன் மூலமாக அவை பெருகுவது தடுக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன.
இத்தகைய இயற்கை முறையைக் கையாண்டு கூன் வண்டுத் தாக்குதலை கட்டுப்படுத்துவதுடன் சுற்றுப்புறச் சூழலையும் பாதுகாத்து, நச்சுத் தன்மையற்ற பழங்களை உற்பத்தி செய்யலாம்.