குஞ்சுப் பருவத்தில் வான்கோழிகளை எப்படியெல்லாம் கவனிக்கணும்?
குஞ்சுப் பருவத்தில் வான்கோழிகளை கவனிக்க வேண்டிய முறை:
1.. குஞ்சுப்பருவம்
வான்கோழிகளில் முதல் நான்கு வார வயது குஞ்சுப்பருவமாகும். ஆனால்குளிர்காலங்களில் இப்பருவம் ஐந்து முதல் ஆறு வாரங்கள் நீடிக்கக்கூடும்.
பொதுவாக கோழிக்குஞ்சுகளை ஒப்பிடுகையில் வான்கோழிக்குஞ்சுகளுக்கு,இரண்டு மடங்கு இடம் தேவைப்படும்.
குஞ்சுகள் வளரும் கொட்டகையை,அகச்சிவப்பு பல்புகள் அல்லது எரிவாயு மூலம் இயங்கும் அடைகாக்கும் கருவிகளைக் கொண்டு, மிதமான வெப்பத்தில் பராமரிக்க வேண்டும்.
2.. குஞ்சுப்பருவத்தில் கவனிக்கப்படவேண்டிய முக்கிய விசயங்கள்
** முதல் நான்கு வார வயதில் ஒரு குஞ்சுக்கு ஒன்றறை சதுரடி இடம்தேவைப்படும்.
** குஞ்சுக்கொட்டகையை குஞ்சுகள் பொறிப்பதற்க்கு குறைந்தது இரண்டுநாட்களுக்கு முன்பே தயாராக வைத்திருக்க வேண்டும்.
** இரண்டு மீட்டர் விட்டத்திற்கு கூளத்தினை ஆழமாக மெத்தை போல் பரப்பிவைக்கவேண்டும்.
** வெப்பமளிக்கும் பல்பு அல்லது எரிவாயு மூலம் இயங்கும் பல்பிலிருந்துகுஞ்சுகள் தூரமாக போவதை தவிர்க்க, ஆழ்கூளத்தினை சுற்றி குறைந்தது ஒரு அடி உயரத்திற்கு தடுப்பு வைக்கவேண்டும்.
** முதலாம் வாரத்தில் குஞ்சுக்கொட்டகையின் வெப்பநிலை 95º F இருக்குமாறும்,அடுத்த நான்கு வாரம் வரை, வாரத்திற்கு 5º F வரை வெப்பநிலையை குறைத்துக்கொண்டே வரவேண்டும்.
** ஆழம் குறைந்த தண்ணீர்த் தட்டுகளையே பயன்படுத்தவேண்டும்
** முதல் நான்கு வார காலத்தில் சராசரியாக ஆறு முதல் பத்து சதம் வரை இறப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. முதல் சில நாட்களில், மங்கலான கண்பார்வை மற்றும் பயத்தின் காரணமாக தீவனம் மற்றும் தண்ணீர் குடிப்பதற்கு குஞ்சுகள் தயக்கம் காட்டும். அந்த சமயங்களில் குஞ்சுகளுக்கு தீவனத்தை கட்டாயப்படுத்திதீவன்ம் கொடுக்கவேண்டும்.