These appliances will definitely help to handle eggs in the poultry farm.

1. குஞ்சுப் பொரிக்கும் தட்டுகள்

அ.. பொதுவாக குஞ்சுப் பொரிக்கும் தட்டுகள் தட்டையாகவோ குழியாகவோ இருக்கும்.

ஆ.. ஒவ்வொரு தட்டிலும் 90 அல்லது 180 முட்டைகள் வைக்கலாம்.

2. அடை முட்டைகளை மாற்றும் எந்திரங்கள்

அ.. இதன் மூலம் பண்ணை முட்டை அட்டையிலிருந்து முட்டைகளை குஞ்சுப் பொரிக்கும் தட்டிற்கு மாற்றப்படுகிறது. 

ஆ.. அதிகமாக முட்டைகளை மாற்றும் குஞ்சுப்பொரிப்பகங்களில் வெற்றிட முட்டை தூக்கிகள் உபயோகப்படுத்தபடுகிறது

முட்டை கண்டறிவான

அ.. ஒளியை கொண்டு முட்டையின் உள் அமைப்புகளை காணும் கருவியாகும்.

ஆ.. ஒவ்வொரு முட்டை மற்றும் பல முட்டைகளை காணுமாறு இரண்டு வகையான முட்டை கண்டறிவான்கள் உள்ளன.