கோழிப் பண்ணை அமைக்க வேண்டுமெனில் இந்த உபகரணங்கள் அவசியம்...
1. அடைக்காப்பான்
இதில் அடை முட்டைகள் முதல் 19 நாட்கள் வைத்து அடைகாக்க படும். இந்த இயந்திரத்தில் வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் முட்டைகளை திருப்புதல் ஆகியவை கட்டுபடுத்துவதற்கான வசதிகள் உள்ளன.
2. குஞ்சு பொரிப்பான்
இது அடைகாப்பானை போல இருந்தாலும் அடை முட்டைகளை திருப்புவதற்கான வசதி இல்லை. மேலும் இதில் தட்டுகள் பொரிக்கும் குஞ்சுகளுக்கு ஏற்றவாறு அமைக்கபட்டிருக்கும். இதில் அடைமுட்டைகள் அடைகாத்தல் காலத்தின் கடைசி 3 நாட்கள் இருக்கும்.
உலகில் காணப்படும் பல்வேறு வகையான அடைகாப்பான் மற்றும் குஞ்சுப்பொரிப்பான்கள்:
1.. காரிடார் வகை பொரிப்பான்கள்
2.. குகை வகை பொரிப்பான்கள்
3.. செங்குத்தான காற்றாலை பொரிப்பான்கள்
3. அழுத்த காற்று அமைப்பு
சில அடைகாக்கும் கருவியில் அழுத்த காற்று முட்டைகள் அடங்கிய தட்டுகளை திருப்பி விட பயன்படுத்தப்படுகிறது. மத்திய பெரிய அழுத்தகாற்று அமைப்பு ஒன்று தூசி தட்டவும் குஞ்சுப் பொரிப்பகத்தினை சுத்தம் செய்யவும் தேவைப்படுகிறது.
4. அவசரகால தயாரன மின் அமைப்புகள்
உள்ளூர் மின் வழங்கல் அமைப்பிலிருந்து மின்சாரம் கிடைக்காத பட்சத்தில் குஞ்சுப் பொரிப்பகத்திற்கு மாற்று மின்சார அமைப்பு இருக்கவேண்டும். ஒரு நிலையான மின்சார ஜெனரெட்டர் குஞ்சுப்பொரிப்பகத்திற்கு அருகில் அல்லது அடுத்த கட்டிடத்தில் இருக்கவேண்டும். நிலையான மின்சார ஜெனரெட்டர் குஞ்சுப் பொரிப்பகத்தின் அனைத்து மின்சார தேவைகளை பூர்த்தி செய்யும் அளவு இருக்கவேண்டும்.
5. குஞ்சுப் பொரிப்பகத்தில் உள்ள உபகரணங்கள்
1.. குஞ்சுப் பொரிப்பானின் தட்டு கழுவிகள்
2.. குப்பைகளை நீக்கும் அமைப்புகள்
3.. முட்டைகளை மாற்றும் இயந்திரங்கள்
4.. முட்டைக்குள் தடுப்பூசி போடும் இயந்திரங்கள்
5.. குஞ்சுப் பெட்டிகள் கழுவிகள்
6.. அலமாரி கழுவிகள்
7.. தடுப்பூசி போடுதல் / இனம் பிரித்தல் / தரம் பிரித்தல் அமைப்புகள்
8.. அதிக அழுத்த காற்றடிப்பான்கள்