Asianet News TamilAsianet News Tamil

வெள்ளாடுகளின் வயதை கண்டறிய இப்படி ஒரு முறை இருக்கு...

There is a way to find the age of goats ...
There is a way to find the age of goats ...
Author
First Published Mar 5, 2018, 12:32 PM IST


வெள்ளாடுகளின் வயதை கண்டறியும் முறை

** ஆடுகளின் ஆயுட்காலம் 10-12 வருடங்கள் ஆகும். 5 -7 ஆண்டுகள் வரை பண்ணையில் லாபகரமாக வளர்த்தலாம். ஆடு வளர்ப்போர் ஆடுகளின் பற்களைக் கொண்டு வயதை தீர்மானித்து கீழ்க்கண்ட பயன்களை அடையலாம்.

** ஆடுகளை வாங்கும்போது அதன சரியான வயதைக் கண்டறிந்து இடைத்தரகர்கள் மூலம் ஏற்படும் இழப்பைத் தவிர்க்கலாம்.

** சரியான வயதில் ஆடுகளை விற்பனைக்கு அனுப்பலாம்.

** வயதான மற்றும் உற்பத்தித் திறனற்ற ஆடுகளைக் கண்டறிந்து அவற்றை பண்ணையிலிருந்து நீக்கம் செய்யலாம்.

** ஆடுகளைக் காப்பீடு செய்வதற்கு வயதை நிர்ணயிப்பது மிக அவசியமாகும்.

** ஆடுகளில் வெட்டும் பற்கள், முன் தாடைப் பற்கள் மற்றும் பின் தாடைப் பற்கள் (அரைக்கும் பற்கள்) காணப்படுகிறது. ஆடுகளின் மேல் தாடையில் வெட்டும் பற்கள் காணப்படுவதில்லை. அதற்கு பதிலாக ஈறு மட்டுமே காணப்படும். 

** கீழ் தாடையில் பக்கத்திற்கு 4 வீதம் 8 வெட்டும் பற்கள் காணப்படும். கீழ் தாடையின் உதடுகளை விலக்குவதன் மூலம் இந்த பற்களைக் காணலாம். பொதுவாக வெள்ளாடுகளில் 20 தற்காலிகப் பற்களும், 32 நிரந்தரப் பற்களும் காணப்படும். மேல் தாடையிலும், கீழ் தாடையிலும் பற்கள் காணப்படும்.

** ஆடுகளை வெளியில் இருந்து வாங்கும்போது அதன் பற்களின் அமைப்பு மற்றும் எண்ணிக்கையை வைத்துதான் வயதைக் கண்டறிய முடியும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios