கெண்டை மீன்கள் வளர்ப்பதால் இவ்வளவு லாபங்கள் இருக்கிறது…
கெண்டை மீன்கள் வளர்ப்பு
கெண்டை மீன்வளர்ப்பு நமது நாட்டில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் ஒரு வேளாண் தொழிலாகும்.
இத்தொழிலிலுள்ள பல லாபங்கள் இத்தகைய பெரும் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும்.
1.. கெண்டை மீன்கள் நமது தட்ப வெப்ப சூழலுக்கு மிகவும் ஏற்றவை. நமது சூழலில் குறுகிய காலத்திலேயே வேகமாக வளர்ந்து விற்பனை எடையைப் பெறும் தன்மை கொண்டவை.
2.. இவற்றின் வளர்ப்பு மற்றும் குஞ்சு உற்பத்தி தொழில் நுட்பங்கள் நிலைப்படுத்தப்பட்டுள்ளன. மீன் குஞ்சுகள் தட்டுப்பாடின்றி கிடைக்கின்றன
3.. கெண்டை மீன்களின் தேவை உற்நாட்டிலேயே அதிகமாக உள்ளதால் விற்பனை செய்வது எளிது
4.. இம்மீன்கள் தாவரப்பொருட்கள், கழிவுகள் மற்றும் சிறிய விலங்கினங்களை உண்ணும் தன்மை கொண்டுள்ளதால் குறைந்த செலவில் அதிக அளவில் உற்பத்தி செய்யலாம். எனவே இத்தொழிலுக்கு அதிக முதலீடு தேவை இல்லை
5.. இம்மீன்கள் ஓரளவு பல்வேறு நோய்களுக்கு எதிர்ப்புத் தன்மை கொண்டுள்ளதாலும், சுற்றுப்புற சூழலிலுள்ள பல இடர்பாடுகளைத் தாங்கி வளரும் தன்மையும் கொண்டுள்ளதால் வளர்க்கப்படும் சூழலில் பெருவாரியாக இறந்து நஷ்டம் ஏற்படும் வாய்ப்புகள் மிகக்குறைவு.
6.. எனவே கெண்டை மீன் வளர்ப்பு நடைமுறையில் உள்ள பல நன்னீர் மீன் வளர்ப்புத் தொழில் நுட்பங்களுக் குறைந்த செலவில் அதிக உற்பத்தியும் தனி இன வளர்ப்பை விட பல பெருங்கெண்டை மீன் இனங்களை ஒரே குளத்தில் இருப்புச் செய்து வளர்க்கும் பல இன மீன்வளர்ப்பு முறையாகவே மேற்கொள்ளப்படுகிறது. இம்முறையினை கூட்டு மீன் வளர்ப்பு என அழைக்கிறோம்.