செம்மறி ஆடுகளுக்கு எந்தெந்த பசுந்தீவனங்கள் ஏற்றது? இதை வாசிங்க…
முழுமையான தீவனம்
செம்மறியாடுகளுக்கு முழுமையான தீவனம் என்பது அடர்தீவனம் 50 பங்கும் நார்த்தீவனம் 50 பங்கும் கலந்து அரைத்து கொடுப்பதாகும். இத்தீவனத்தை வளர்ந்த ஆடுகளுக்கு மேய்ச்சலுடன் தினமும் 750 - 1000 கிராம் கொடுக்க வேண்டும்.
தானியவகை பசுந்தீவனங்கள்
மக்காச்சோளம், சோளம். கம்பு, கேழ்வரகு, தினை மற்றும் சாமை
பயிறு வகை பசுந்தீவனங்கள்
குதிரை மசால், வேலி மசால். காராமணி, அவரை, கொத்தவரை, நரிப்பயறு, சணப்பு, கொள்ளு, சங்கு புஷ்பம், ஸ்டைலோ, சிராட்ரோ, செண்ட்ரோ மற்றும் டெஸ்மோடியம்.
புல் வகை பசுந்தீவனங்கள்
கம்பு நேப்பியர், ஒட்டுப்புல், கினியாப்புல், கொழுக்கட்டைப்புல், ஊசிப்புல் மற்றும் தீனாநாத் புல்.
மர இலை பசுந்தீவனங்கள்
அகத்தி, சூபாபுல், கிளைரிசிடியா, கொடுக்காபுளி, ஆச்சா, முருங்கை, கல்யான முருங்கை, அரசு, வாகை, வேம்பு, வெள்வேல், கருவேல், குடைவேல், ஆல், அத்தி, பலா, புளி, இலந்தை, நாவல் மற்றும் நெல்லி முதலியவை தமிழகத்திற்கு ஏற்ற தீவன மரங்களாகும்.
தாது உப்புக்கட்டி பசுந்தீவனங்கள்
இவற்றில் முக்கிய தாதுஉப்புக்களான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம் குளோரைடு, பொட்டாசியம், கந்தகம் மற்றும் மக்னீசியமும், குறைந்த அளவு தேவைப்படும் தாதுக்களான இரும்பு, துத்தநாகம், தாமிரம் மற்றும் மாங்கனீசு போன்றவையும் அடங்கி இருக்கின்றன.
தாது உப்புக்கட்டியை ஆட்டுக்கொட்டிலில் கட்டி தொங்கவிடுவதன் மூலம் வளரும் ஆடுகள், சினை மற்றும் குட்டி ஈன்ற ஆடுகள் தங்களுக்கு தேவையான தாதுக்களைப்பெற ஏதுவாக இருக்கும்.