கோழிக் கொட்டகை அமைப்பதன் முக்கியத்துவமும், அமைக்கும் முறையும்…

The importance and structure of chicken sheds ...
The importance and structure of chicken sheds ...


கோழிக் கொட்டகை அமைப்பதன் முக்கியத்துவத்துவம்

நம் நாட்டில் திறந்தவெளிக் கோழி வளர்ப்பே பரவலாகக் காணப்படுகிறது. ஆனால் வர்த்தக ரீதியில் நல்ல இலாபம் பெற பண்ணை வீடுகள் அமைக்க வேண்டியதாகிறது.

கோழிப் பண்ணை வீடுகள் நல்ல காற்றோட்டத்துடன், கோடைக்காலங்களில் குளிர்ச்சியாகவும், குளிர்க்காலங்களில் வெதுவெதுப்பாகவும் இருக்கவேண்டும்.

வெப்பம் மிகுந்த நாடுகளில் பக்கங்கள் வடக்கு தெற்காக இருக்குமாறு கொட்டகை அமைக்க வேண்டும். அப்போது தான் சூரிய வெப்பம் கொட்டகைக்குள் விழாமல் தவிர்க்க முடியும்.

குளிர்ப்பிரதேசங்களில் அதிக சூரிய வெளிச்சத்தைப் பெற தெற்கு, தென்கிழக்காக கொட்டகை அமைத்தல் வேண்டும். அப்போது தான் சரியான காற்றோட்டம் கிடைக்கும்.

இளம் குஞ்சுகளை கோழிக் கொட்டகையிலிருந்து 45-100 மீ தொலைவில் அமைத்தால் தான் நோய் பரவுவதைக் குறைக்க இயலும்.

திறந்த வெளிக் கொட்டகை அமைப்பில் அகலம் 9 செ.மீ இருக்க வேண்டும். இடத்தின் வெப்பநிலையைப் பொறுத்து உயரத்தை மாற்றிக் கொள்ளலாம்.

சாதாரணமாக 2-4-3 மீ உயரம் வரை அமைக்கலாம். வீட்டினுள் வெப்பத்தைக் குறைக்க உயரத்தை அதிகப்படுத்த வேண்டும்.

கோழிக் கொட்டகை அமைக்கும் முறை

தேவையான வசதிகளுடன் பாதுகாப்பானதாகவும், நீண்ட நாள் தாங்கக் கூடியதாகவும் கோழிப்பண்ணை வீடுகள் இருக்கவேண்டும்.

தரை ஈரத்தைத் தாங்கக் கூடியதாக, எந்த வெடிப்பும், ஓட்டையோ இன்றி சுத்தம் செய்ய எளிதாக இருக்கவேண்டும்.

கூள தரை, சிலேட் தரை, சிலேட் – கூள தரை, கம்பி மற்றும் கூளத்தரை உண்டு. சுற்றுச் சுவர்கள் கூரையைத் தாங்கக் கூடியதாகவும், காற்றிலிருந்து கோழிகளைப் பாதுகாப்பதாகவும் இருத்தல் வேண்டும்.

கூரை அதிக பாரமின்றி ஈரத்தை எளிதில் உலர்த்துவதாக அமைக்கவேண்டும். கூரைகளில் கோடை வெப்பத்திலிருந்து பாதுகாக்க அலுமினியம் பெயின்ட் (வண்ணப்பூச்சு கொண்டு பூசுதல் நன்மை பயக்கும்.

அதே போல் கூரை இருபுறமும் கீழே இறங்கியவாறு அமைத்தால் மழை நீர் தெரிப்பது குறையும். பக்கங்கள் இரண்டில் 1 பங்கு அல்லது 3ல் 2 பங்கு திறந்த வெளியாக அமைக்கலாம்.

அடை காக்கும் கொட்டிலில் உயரத்தின் பாதி அளவு பக்கங்கள் திறந்ததாகவும், இறைச்சி மற்றும் முட்டைக் கோழிகளில் 3ல் 2 பகுதி திறந்தவெளியாகவும் இருத்தல் அவசியம்.

மேலும் இந்தக் கொட்டகை அமைப்பானது நல்ல நீர்த்தேக்கமற்ற, வெள்ள பாதிப்பு ஏதுமின்றி எளிதில் சாலையை அடையுமாறு இடத்தில் இருப்பது சிறந்ததாகும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios